ஜெ.,வை நான் காப்பாற்றியதால்தான் பொதுச் செயலாளர் ஆனார், முதலமைச்சரானார்- திருநாவுக்கரசர்

 
தொகுதி பங்கீடு குறித்து ஏகே அந்தோணி பேசுவார்: திருநாவுக்கரசர்

ஜெயலலிதா தான் எனக்கு நன்றி கடன் பட்டவர், நான் அவருக்கு நன்றி கடன் பட்டவன் அல்ல, அவரை நான் காப்பாற்றியதால் தான் பொதுச்செயலாளர் ஆனார், முதலமைச்சர் ஆனார் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர் ராகுல்

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் இன்று புதுக்கோட்டை மவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வங்கிகளின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட அளவிலான வங்கி பணிகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், “ஜெயக்குமார் எப்போது அதிமுகவில் வந்தார் என்று தெரியவில்லை, எம்ஜிஆர் அவரை பார்த்துள்ளாரா? என்று எனக்கு தெரியவில்லை. என்னை பொருத்தவரை ஜெயலலிதா தான் எனக்கு நன்றி கடன் பட்டவரே, தவிர நான் ஜெயலலிதாவுக்கு நன்றி கடன் பட்டவர் கிடையாது.

ஜெயலலிதாவை நான் காப்பாற்றி கொண்டு வந்ததால் தான் அவர் பொதுச் செயலாளராக ஆனார். காப்பாற்றியதால் தான் முதலமைச்சரானார். நான் காப்பாற்றியதால் தான் இவர்களெல்லாம் மந்திரியாக இருந்துவிட்டு சவுரியமாக இருக்கிறார்கள். அதனால் ஜெயலலிதா எனக்கு நன்றியாக இருந்திருக்க வேண்டுமா அல்லது நான் ஜெயலலிதாவுக்கு நன்றி ஆக இருந்திருக்க வேண்டுமா? ஜெயலலிதாவுக்கு நிறைய நான் நல்லது செய்துள்ளேன். ஆனால் அவர் எனக்கு கெடுதல் தான் நிறைய செய்துள்ளார். இது முடிந்து போன விஷயம், அவரும் இயற்கை எய்திவிட்டார். இந்த விவகாரத்தில் எனக்கும், ஜெயக்குமாருக்கும் பிரச்சனை இல்லை. சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். அதிமுகவில் நான் உண்ணவே இல்லை, அப்புறம் எப்படி உண்டக வீட்டுக்கு துரோகம் பண்ண முடியும்.

ராகுலுக்கு வயசு இருக்கு! கண்டிப்பாக அவர் பிரதமராவார்- திருநாவுக்கரசர்

35 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை பற்றி தற்போது பேசி வருகின்றனர். இதை பார்த்தவர்களும் பேசுகிறார்கள், பார்க்காதவர்களும் பேசுகிறார்கள். நிர்மலா சீதாராமன் 35 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலிலேயே இருந்திருக்க மாட்டார். அவர் படித்துவிட்டு லண்டனுக்கு பணிக்கு சென்று விட்டு 92-ல் தான் அவர் இந்தியாவுக்கே வந்துள்ளார். ஆனால் ஜெயலலிதா விவகாரம் 89-இல் நடந்ததை கூட இருந்து பார்த்ததை போல் பேசி உள்ளார். அதேபோல் தமிழிசை சௌந்தர்ராஜன் அரசியலில் இருக்க ஏறத்தாழ வாய்ப்புகள் கிடையாது. அவரது தந்தை கூடி இருந்து பார்த்ததையெல்லாம் தமிழிசையா நேரில் பார்த்திருப்பார். அப்போது தொலைக்காட்சிகளில் கூட ஒளிபரப்பு கிடையாது. அவரது அப்பா இருந்ததால் அதை வைத்து அவரும் பேசி வருகிறார். என்னை பொருத்தவரை நான் நடந்த நிகழ்வை சொல்லியுள்ளேன்” என்றார்.