ஆட்சியர் அலுவலகம் முன்பு படுத்துறங்கிய ஜோதிமணி..2-வது நாளாக தொடரும் தர்ணா..

 
ஜோதிமணி

கரூர் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இரண்டாவது நாளாக இன்றும் தனது உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து  வருகிறார்.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட  உதவிகள் செய்யும் ADIP திட்டம், பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த திட்டத்தின் மூலம் முகாம் நடத்தி நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகள் மற்ரும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்த திட்டம் தமிழ்நாட்டிலும்  பல மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது .

ஆனால் கரூர் கரூர் மாவட்டத்தில் இந்த திட்டம் தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை. இதற்கு மாவட்ட ஆட்சியர் தான் காரணம் எனவும் திட்டமிட்டே கமிஷன் எதிர்பார்த்து ஆட்சியர் இந்த திட்டத்தினை செயல்படுத்தவில்லை எனவும் கரூர் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து , அந்த பட்டியலை கொடுத்து ஆட்சியர் ADIP திட்டத்தை செயல்படுத்த  முன்வரவில்லை எனக்கூறி நேற்று ஜோதிமணி , ஆட்சியர் அலுவலகம் முன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஜோதிமணி
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னை மக்கள் பணி செய்ய விடாமல் கரூர் மாவட்ட ஆட்சியர் தடுப்பதாக கூறிய ஜோதிமணி,
கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கும்  கடிதம் எழுதியுள்ளார். இரவு கரூர் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பே படுத்து உறங்கிய ஜோதிமணி இன்று 2-வது நாளாக  தனது உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்திருக்கிறார். லேப்டாப் வைத்து போராட்ட களத்திலேயே அவர்  பணிகளை மேற்கொள்ளும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன மாற்றுத்திறனாளிகளுக்காக முகாம் நடத்தப்படும் தேதி அறிவிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் எனவும் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.