மக்களிடம் பணத்தை அள்ளி வீசிய காங்கிரஸ் தலைவர்- வைரலாகும் வீடியோ

 
t

ஓட்டுக்காக மக்களிடம் பணத்தை அள்ளி வீசிய காங்கிரஸ் பிரமுகர்கள் வீடியோ வைரலாகி கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற ஆட்சிக்காலம்  வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது.  இதை அடுத்து அம் மாநிலத்திற்கு விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது . இதற்கான அறிவிப்பு இன்று 29. 3. 2023ல் வெளியாக இருக்கிறது.   இதனால் தற்போது பாஜக , ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது. காங்கிரஸ்,  ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக களமிறங்கி இருக்கிறது.

tks

 காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில தலைவர் பி. கே .சிவகுமார் முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

 கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மையான சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒக்கலிகா கவுடா.  இவர்களின் ஓட்டு வங்கியை கைப்பற்ற திட்டமிட்டு இருக்கிறது காங்கிரஸ். அதே ஒக்கலிக்கா கவுடா சமூகத்தைச் சேர்ந்தவர் தான் டி. கே. சிவகுமார்.   இவர் மாண்டியா பகுதியில் பேரணியில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். 

 கடந்த காலங்களில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கோட்டையாக விளங்கியது மாண்டியா.   இந்த தொகுதியில் ஒக்கலிகா கவுகடா சமூகத்தைச் சேர்ந்த டி. கே. சிவகுமார் பிரச்சார மேற்கொண்டதால் ஒட்டுமொத்த ஓட்டையும் கைப்பற்றி விடலாம் என்று நினைக்கிறது காங்கிரஸ் .  இந்த நிலையில் இந்த மாண்டியாவில் நடந்த அந்த பிரச்சாரத்தின் போது அங்கு திரண்டு இருந்த மக்கள் மீது பணத்தை அள்ளி வீசியுள்ளார் டி.கே. சிவகுமார்.  இதை சிலர் வீடியோ எடுத்து வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி  இருக்கிறது.