கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் தேர்தலை நடத்துவது சரியல்ல.. ரஷித் ஆல்வி

 
ரஷித் ஆல்வி

கொரோன பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை நடத்துவது சரியல்ல, இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ரஷித் ஆல்வி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பி.யுமான ரஷித் ஆல்வி கூறியதாவது: நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் கோவிட்-19 வழக்குகள் இரட்டிப்பாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில், தேர்தல்களை நடத்துவது பொது நலனுக்கான இல்லை. தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட தேர்தலில் போட்டியிடுவது கடினம். தேர்தலில் போட்டியிடும் தலைவர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தால், தேர்தலை எப்படி எதிர்கொள்வது?.

தேர்தல்

பெரிய பொதுக்கூட்டங்கள் நடத்தப்படாமல், சிறிய பொதுக்கூட்டம் அல்லது பிரச்சாரம் நடத்தினால், அதுவும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அச்சுறுத்தல். வேட்பாளர்கள் கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். சட்டப்பேரவை தொகுதியில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கும். அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ பொதுமக்களை சந்திக்காமல் தேர்தலில் போட்டியிடுவது சாத்தியமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம்

அதேசமயம் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்தியுள்ளது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் உரிய நேரத்தில் தேர்தலை நடத்த விரும்புவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள, ஆகையால் தேர்தலை நிறுத்தி வைக்க சாத்தியமில்லை. அதேசமயம் கோவிட் பரவலை கருத்தில் கொண்டு இம்மாதம் 15ம் தேதி வரை நேரடி பொதுகூட்டங்களுக்கு அனுமதி கிடையாது. அதன் பிறகு பரிசீலனை செய்யப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.