கர்நாடகாவில் பாதயாத்திரையை தொடங்கிய காங்கிரஸ்.. கொரோனா காலத்தில் அரசியல் விளையாடுகிறார்கள்.. பா.ஜ.க.

 
பா.ஜ.க.

கர்நாடகாவில் மேகதாது குடிநீர் திட்டத்தை விரைவில் செயல்படுத்தக்கோரி காங்கிரஸ் 11 நாள் பாதயாத்திரையை நேற்று தொடங்கியது.

கர்நாடகாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல விதிமுறைகளை மாநில அரசு அமல்படுத்தியுள்ள சூழ்நிலையில், மேகதாது குடிநீர் திட்டத்தை விரைவில் செயல்படுத்தக்கோரி காங்கிரஸ் 11 நாள் பாதயாத்திரையை நேற்று தொடங்கியது. இது தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறியதாவது: காங்கிரஸ் அரசியல் வித்தை செய்கிறது. நேர்மையாக மேகதாது தண்ணீரைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. அதில் அக்கறை இருந்தால் ஐந்தாண்டு கால ஆட்சியில் ஏதாவது செய்திருக்கலாம். எதுவும் செய்யவில்லை. டி.பி.ஆர். கூட செய்யவில்லை. ஆட்சியில் இருந்தபோது அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. பிம்பத்தை கட்டியெழுப்புவதையும் மனதில் வைத்து இந்த பாதயாத்திரையை நடத்துகிறார்கள்.

காங்கிரஸ் பாதயாத்திரை

நாங்கள் அவர்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம். கோவிட்-19 பாதிப்புகள் பரவி வரும் நிலையில் திட்டத்தை கைவிடுமாறு நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது. சட்டப்படி நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுப்போம். சுதந்திரம்அடைந்ததில் இருந்து பல ஆண்டுகளாக நாட்டையும், மாநிலத்தையும் காங்கிரஸ் ஆட்சி செய்தது. தொற்றுநோய் சூழ்நிலையில் அவர்கள் அரசியல் விளையாடுவதை மாநில மக்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். ஜனநாயகத்தில் மாநில மக்கள் அவர்களை பார்க்கட்டும். அதனால்தான் நாங்கள் அதை செய்ய அனுமதித்துள்ளோம்.

அரக ஞானேந்திரா

சட்டப்படி நடவடிக்கை எடுக்க ராமநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. உடல் ரீதியாக நாங்கள் பாதயாத்திரையை நிறுத்தவில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். எனவே, கோவிட் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தின்படி எப்.ஐ.ஆர். பதிவு செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.