தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்த காங்கிரஸ்

 
 சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கனும் - செல்வப்பெருந்தகை  சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கனும் - செல்வப்பெருந்தகை

என்.டி.ஏவுடன் கூட்டணியில் உள்ள தேமுதிகவை காங்கிரஸ் கூட்டணிக்கு அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இணைய தேமுதிகவுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார். கூட்டணியில் தேமுதிக தொடர்வதாக அதிமுக கூறினாலும், கூட்டணியை பிரேமலதா உறுதிப்படுத்தவில்லை.


பாஜக - அதிமுக கூட்டணி குறித்து அதிமுகவுக்குள்ளேயே அதிருப்தி நிலவும் நிலையில் தேமுதிக அதிமுகவை கழட்டி விட்டால், அது அதிமுகவுக்கு பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தேமுதிகவுக்கு எம்.பி. பதவி கொடுப்பாரா எடப்பாடி பழனிசாமி என்பதற்கான விடை விரைவில் தெரிந்து விடும். அது தெரிந்துவிட்டால் தேமுதிகவின் முடிவும் தெரிந்துவிடும்