கேரளாவில் கால்பதிக்கும் காங்கிரஸ்
பெரும்பாலான கேரள பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 20 இடங்களையும் வெல்லும் வாய்ப்பு உள்ளது. எனினும் இரண்டு முதல் நான்கு இடங்களை இடதுசாரி கூட்டணி வெல்லலாம்.
பாஜக கடந்த முறையை விட ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் வாக்கு வங்கி அதிகரிக்கும். ஒரு இடத்தில் கூட அவர்கள் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்பதை மிகத் தீவிரமாக கூறினார்கள். ஆனால் பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜக அதிகபட்சம் மூன்று இடங்கள் வரை கைப்பற்றும் என கூறுகிறது.
கேரளாவில் காங் 15 தொகுதிகள் வரை வெல்லும்
TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில்
காங்கிரஸ் : 14 - 15 தொகுதிகள்
கம்யூனிஸ்ட் :4 தொகுதிகள்
பாஜக : 01 தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 21-25 இடங்களை பெறும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 0-4 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு தேர்தல் முடிவுகள் பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, மத்திய பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில்,
பாஜக : 28 - 29 தொகுதிகள்
காங்கிரஸ் : 0 - 1 தொகுதி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.