“20-25 சீட்டு, திமுகவே தேர்தல் செலவுகளை ஏற்க வேண்டும்”- காங்கிரஸ் டிமாண்ட்

 
தமிழக எம்.பிக்களுக்கு தனி அலுவலகம் கிடைக்க வழிசெய்க - முதலவரை சந்தித்து செல்வப்பெருந்தகை கோரிக்கை..!! தமிழக எம்.பிக்களுக்கு தனி அலுவலகம் கிடைக்க வழிசெய்க - முதலவரை சந்தித்து செல்வப்பெருந்தகை கோரிக்கை..!!

இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகியுள்ளது. 

Image


அதன்படி, 1) ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் முக்கிய குறிக்கோளாக இருந்தாலும், பொது எதிரியான பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முக்கிய குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் திமுக கூட்டணியில் தொடர்வது என்ற முடிவை காங்கிரஸ் கட்சி எடுக்கிறது.

2) 60-70 சீட்டுகள் பெறுவது காங்கிரஸ் கட்சியின் முக்கிய எண்ணமாக இருந்தாலும் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஒரு 20-25 சீட்டுகளாவது பெற்றுக்கொள்வது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

3) பண்ணையார்கள் அதிகம் இருக்கும் கட்சியாக எங்கள் கட்சி இருந்தாலும், ஒருவரும் செலவு செய்ய மாட்டார்கள் என்பதால் தேர்தல் செலவுகளை திமுகவே ஏற்க வேண்டும் என்று இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.

4) முக்கிய குறிப்பாக, எங்கள் வேட்பாளர்களோ, தொண்டர்களோ தேர்தல் பணி செய்ய மாட்டார்கள் என்பதால் மொத்த தேர்தல் வேலைகளையும் திமுக மற்றும் மற்ற கூட்டணி கட்சியினரே பார்த்துக்கொள்ள வேண்டும். எங்கள் கட்சியினர் வெயில் குறையும் போது வாக்கு கேட்க விருப்பம் இருக்கும் போது மட்டுமே வருவார்கள். மீதி நேரங்களில் தேர்தல் பணிமனைகளில் இருப்பார்கள்.

5) தவறாமல் தேர்தல் பணிமனைகளில் இருக்கும் எங்கள் தொண்டர்களுக்கு உணவு மற்றும் இதர பிற தேவைகளையும் கூட்டணி கட்சியினரே கவனித்துக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட கட்டளைகளின் அடிப்படையில் திமுகவுடன் கூட்டணி வைப்பது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்படுகிறது.