ராஜஸ்தான் இடைத்தேர்தல்.. 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்

 

ராஜஸ்தான் இடைத்தேர்தல்.. 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்

ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடைபெற 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ராஜஸ்தானில் கடந்த 4 மாதங்களில் சுஜன்கர், ராஜ்சமண்ட் மற்றும் சஹாரா ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் மரணம் அடைந்துள்ளனர். இதனால் அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் இந்த 3தொகுதிகளில் ராஜ்சமண்ட் தொகுதியை தவிர்த்து மற்ற 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ராஜ்சமண்ட் தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்று இருந்தது.

ராஜஸ்தான் இடைத்தேர்தல்.. 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்
தேர்தல்

ராஜஸ்தானில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இடைத்தேர்தல் நடைபெற 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சுஜன்கர் சட்டப்பேரவை தொகுதியில் மனோஜ் குமார் மெக்வால், ராஜ்சமண்ட் தொகுதியில் தன்சுக் போகாராவும், சஹாரா தொகுதியில் காயத்ரி தேவியும் போட்டியிடுவார்கள் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. பா.ஜ.க. அண்மையில் தனது வேட்பாளர்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் இடைத்தேர்தல்.. 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்
இந்திய தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் இந்த நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் ஏப்ரல் 17ம் தேதி நடைபெறும் என அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும். இந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் மார்ச் 30. மார்ச் 31ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஏப்ரல் 3ம் தேதிக்குள் வேட்புமனுவை திரும்ப வாங்கி கொள்ளலாம்.