யாருக்கு வெற்றி? ஈரோடு இடைத்தேர்தல் - லயோலா கள ஆய்வு முடிவுகள்

 
அட்

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  அத்தகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை அடுத்து அத்தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  திருமகனின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.   

ல்

 திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு மீண்டும் அந்த தொகுதியை ஒதுக்கி இருப்பதால் காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் போட்டியிடுகிறார்.  இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சென்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.

 அதிமுக கூட்டணியில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தனது வேட்பாளரை அறிவிப்பு செய்து  பிரச்சாரம் செய்து வருகிறார் . அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள், முன்னால் எம்எல்ஏக்கள் ,அதிமுக நிர்வாகிகள் திரண்டு சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
 மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

 நாம் தமிழர் கட்சி,  தேமுதிக கட்சி உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன .    பாமக இந்த  இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.   அதே நேரம் யாருக்கும் ஆதரவும் தெரிவிக்கவில்லை. 

 இந்த ஈரோடு இடைத்தேர்தல் குறித்து லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கள ஆய்வு செய்து முடிவுகளை அறிவித்துள்ளனர் .  அதன்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 49 சதவீத வாக்குகளை பெறுவார் என்றும்,   அதிமுக வேட்பாளர் 36 சதவிகித வாக்குகளை பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 10% வாக்குகளை பெறுவார் என்றும் அறிவித்திருக்கிறது .

அப்படி என்றால்,  இந்த இடைத்தேர்தலில்  திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கள ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.