பேரவையில் உதயநிதி மகளுக்கு வாழ்த்து! ஜெயக்குமார் குற்றச்சாட்டு

 
u

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளுக்கு பேரவை தலைவர் வாழ்த்து சொன்னது பேரவை மாண்பை சிதைக்கும் செயல் என்று குற்றம் சாட்டியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

 வடசென்னை தெற்கு- கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்து பாதசாரிகளுக்கு மோர் வழங்கினார் .  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,    சட்டமன்றத்தில் நடந்தவை குறித்து ஆவேசப்பட்டார்.

j

 சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனை பற்றி பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்த மறுக்கப்படுகிறது .  எதிர்க்கட்சிகள் பேசுவதை நேரலை செய்யாமல் இருக்கிறார்கள்.  தமிழகத்தில் இதனால் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் ஆட்சி என்றால் அது திமுக ஆட்சி தான் என்று ஆத்திரப்பட்டவர்,  எதிர்க்கட்சியினர்  பேச வாய்ப்பு மறுக்கும் பேரவை தலைவர் தந்தையும் மகனும் புகழ்பாடுவதற்கு மட்டும் வாய்ப்பு அளித்து புகழ்பாடும் மன்றமாக சட்டப்பேரவையை மாற்றிவிட்டார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

 நடுநிலையோடு செயல்பட வேண்டியவர் பேரவை தலைவர் . ஆனால் அவர் பேரவை மாண்பையே சிதைக்கின்ற விதமாக செயல்படுகிறார்.  பேரவை உறுப்பினர்களுக்கு வாழ்த்து சொல்வதை கடந்து பேரவை உறுப்பினர் உதயநிதியின் மகளுக்கு பேரவையில் வாழ்த்து சொல்கிறார் . இது பேரவை தலைவரின் மாண்பை சிதைத்து விட்டது என்று குற்றம் சாட்டினார்.

 திமுக ஆட்சியில் தான் விளையாட்டில் கூட அரசியலில் கலந்து இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.  சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் பாஸ் வழங்கிவிட்டு அதிமுக உறுப்பினர்கள் பாஸ் கேட்டால் அமித்ஷாவின் மகனிடம் கேட்கச்  சொல்கிறார் விளையாட்டு துறை அமைச்சர் . 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு மூன்று மடங்கு  டிக்கெட்டுகளை யாருக்காக புக் செய்து வைத்திருக்கிறார்கள் என விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.