சீமான், சாட்டை துரைமுருகனை கைது செய்யக்கோரி சென்னை காவல் ஆணையத்தில் புகார்

 
saa

இனவெறியை தூண்டும் வகையில் பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

saa

 அந்த புகார் மனுவில்,  வட மாநில இளைஞர்கள் பற்றி எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் சாட்டை துறைமுகன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.  

 இந்த மனு புகார் மனு அளித்த பின்னர் மக்கள் அதிகாரம் அமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.   அப்போது வட மாநில இளைஞர்கள் பலர் தங்களின் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்கு வந்து வேலை பார்த்து வரும் நிலையில் அவர்களை அடித்து துரத்த வேண்டும் என்று தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் சாட்டை துரைமுருகனும் பேசி வருகின்றார்கள்.

 வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டுகின்ற வகையில் ஒரே இடத்தில் வேலை செய்யும் தமிழ்நாடு தொழிலாளர்களுக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் போக்கை உருவாக்குகின்ற வகையில் சீமானும் சாட்டை துரைமுருகனும் பேசி வருகின்றார்கள்.

at

 வடக்கன் வரும்போது 25 கிலோ கஞ்சாவோடு வருகிறான்.  பகலில் வேலை பார்த்துவிட்டு இரவில் கஞ்சா விற்கின்றான்.  நமது பெண்களை கையைப் பிடித்து இழுப்பான்.  நமது குழந்தைகளை கடத்திச் சென்று விடுவான் என்ற சீமான் தொடர்ச்சியாக பேசி வருகிறார் . இதனால் தமிழ்நாட்டில் வட மாநில இளைஞர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மையை நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமானும் சாட்டை துரைமுருகனும் ஏற்படுத்தி வருகின்றார்கள்.   சமூகத்தில் இதனால் அசாதாரண சூழ்நிலை உருவாகி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது .   இனவெறியை  ஏற்படுத்த துடிக்கும் சீமானையும் சாட்டை துரைமுருகனையும் காவல்துறையினர் கடுமையாக கண்டிக்க எடுக்க வேண்டும்,  நாம் தமிழர் கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.