ரூட்டை மாற்றிய கம்யூனிஸ்ட்டுகள்- இடைத்தேர்தலில் தவெக அரசுக்கு எதிராக பிரச்சாரம்

 
தற்போது திமுக கூட்டணி இல்லை- சண்முகம்

இடைத்தேர்தலில் தவெக அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய கம்யூனிஸ்ட்டுகள் திட்டமிட்டுள்ளனர்.

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த தொகுதியில் ஆளும் கட்சிக்கு எதிராக அரசியல் ரீதியாக கம்யூனிஸ்டு பிரச்சாரம் செய்வது. திமுக, அதிமுக சொல்லும் குற்றச்சாட்டுகளை வழக்கமான அரசியல் விமர்சனமாக பார்க்கும் மக்கள் கூட, ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எழுப்பும் கேள்விகளை வேறு விதமாக பார்க்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இதனால், கம்யூனிஸ்ட்களின் பிரச்சாரம் தவேகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. அதனால் இந்த இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது மட்டுமல்ல, கம்யூனிஸ்ட்களின் இந்த வித்தியாசமான அரசியல் நிலைப்பாடு கவனிக்கப்படுகிறது. 

ஆட்சிக்கு ஆதரவு அளித்துக்கொண்டே தேர்தலில் தனியாகப் போட்டியிடுவது, அதே நேரத்தில் ஆட்சியின் கொள்கைகள் குறித்து விமர்சனங்களை முன்வைப்பது என இந்த அரசியல் நகர்வு மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் முக்கியமானது. எனவே, இந்த இடைத்தேர்தல் கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு வாக்கு சோதனை மட்டுமல்ல, தமிழக அரசியலில் தங்களுடைய தனி இடத்தை எவ்வளவு வலுவாக தக்கவைத்திருக்கிறார்கள் என்பதற்கான சோதனையும் கூட. தவெகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்காலத்தில் எப்படி அரசியல் பயணத்தைத் தொடரப்போகின்றன என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.