சிறுபான்மையினர் மற்றும் பிறரின் உரிமைகள் கர்நாடகாவில் பாதுகாக்கப்படுகின்றன... பசவராஜ் பொம்மை

 
சிறுபான்மையினர் உரிமைகள்

கர்நாடகாவில் அனைத்து சிறுபான்மையினர் மற்றும் பிறரின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதியளித்தார்.

கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் உள்பட 34 பேர் கொண்ட ஒரு குழு, கர்நாடகாவில் மத சிறுபான்மையினருக்கு எதிராக அடிக்கடி நடக்கும் வன்முறை தொடர்பாக தங்களது கவலைகள் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஒரு கடிதம் எழுதினர். இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம், மாநிலத்தில் அனைத்து சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

பசவராஜ் பொம்மை

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையினர் மற்றும் பிறரின் உரிமைகள் கர்நாடகாவில் பாதுகாக்கப்படுகின்றன. சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தின் பிற பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் உரிமைகளை பாதுகாப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிறுபான்மையினர் (கோப்புப்படம்)

வரலாற்றாசிரியர்கள் ராமச்சந்திர குஹா, பேராசிரியர் ஜானகி நாயர், விஞ்ஞானிகள் பேராசிரியர் ஷரத்சந்திர லேலே, பேராசிரியர் வித்யானந்த் நஞ்சுண்டியா, சமூகவியலாளர்கள் ஏ.ஆர்.வாசவி மற்றும் பேராசிரியர் சதீஷ் தேஷ்பாண்டே, கன்னட எழுத்தாளர்கள் விவேக் ஷான்பாக், புருஷோத்தம் பிலிமலே மற்றும் கே.பி. சுரேஷா மற்றும் ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் ஆகியோர் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதிய 34 பேரில் அடங்குவர்.