சந்தி சிரிச்சு போவ.. வச்சு கிழிகிழின்னு கிழிச்சு விட்டுருவோம்- சித்தமல்லி மோதல்-மேடையில் இடும்பாவனம் கார்த்தி பதிலடி
திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சியினருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல் எழுந்தது. இந்த நிலையில் சித்தமல்லியில் நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தின் போது திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி போலீசாரால் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து நாம் தமிழர் கட்சியினர் திமுகவினரை கடுமையாக எச்சரித்து விமர்சித்து மேடையிலேயே பதிலடி கொடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை அருகே சித்தமல்லி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கூட்டம் நடந்தது. நாம் தமிழர் கட்சி ஏன் எதற்கு ? விளக்க பொதுக்கூட்டம் என்ற பொதுக்கூட்டம் நடந்தது . இந்த பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பங்கேற்று பேசினார் . அவர் மேடையில் திமுகவை விமர்சனம் செய்து பேசிய போது, அந்த பகுதியில் திமுக கட்சி அலுவலகத்தில் அமர்ந்திருந்த திமுகவினர் பொதுக்கூட்ட மேடைக்கு நோக்கி ஆவேசமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனாலும் ஆவேசமாக மேடையில் காளியம்மாளை நோக்கி மது பாட்டில்களை தூக்கி வீசினர். மேடையில் சுற்றி நின்று காளியம்மாள் மீது பாட்டில்கள் விழாதபடி காத்து நின்று இருக்கிறார்கள் நாம் தமிழர் நிர்வாகிகள்.
இதன்பின்னர் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி பேசும்போது திமுகவினருக்கு பதிலடி கொடுத்தார். திமுகவுக்கு விசுவாசத்தை காட்ட வேண்டும் என்றால் ஈரோடு கிழக்கு தொகுதியில் போயி பாத்திரங்கழுவி கொடுக்குறாங்க. துணி துவைத்து கொடுக்குறாங்க அவங்களோட போயி அந்த வேலையை பாரு. விசுவாசத்தை காட்டு . இங்க வந்து எதுக்கு கூச்சல் போடுற? இங்கே மேடையில் பேசுவதால் கொந்தளிக்கிற ஆவேசப்படுற?
நானும் என் அக்கா காளியம்மாளும் டிவியில் பேச போறோம் . அப்போது என்ன செய்வே? டிவியை போட்டு உடைப்பீயா? ஏன் இந்த வேலை. எனக்கு வயசு 31 . ஆனாலும் நான் பக்குவமா இருக்கேனா இல்லையா? பக்குவமாக மாற்றுக்கருத்து ஏற்றுக் கொண்டு வருகிறேன் . ஆனால் உங்களுக்கு 40 வயசு 50 வயசு ஆகுதுல்ல. வயசுக்கு ஏத்த முதிர்ச்சி வேண்டாமா என்று ஆவேசப்பட்டார்.
நான் வரி செலுத்துகிறேன் வாக்கு செலுத்துகிறேன் . அதனால் நான் கேள்வி கேட்பேன் . என்னை பேசக்கூடாது திமுகவை பேசக்கூடாது அதைப் பேசக்கூடாது இதை பேசக்கூடாது... இந்த சண்டித்தனம் எல்லாம் இங்கே பண்ணக்கூடாது. நீ சண்டை போடுறியா மேடைய உடைப்பியா? சித்த மல்லியில் நடக்கிற செய்தி தமிழ்நாடு முழுக்க பரவும் சந்தி சிரிச்சு போவ வச்சு கிழிகிழின்னு கிழிச்சு விட்டுருவோம். 21 மாத ஆட்சியில் சிறப்பான ஆட்சியை கொடுத்திருந்தால் எதற்காக வாக்கு பிச்சை கேட்கிறீர்கள். சாதனையை சொல்லி வாக்கு கேட்கத் துப்பில்லை. குக்கர் கொடுத்து, எவர்சில்வர் குடம் கொடுத்து, தங்க காசு கொடுத்து, பணம் கொடுத்து வாக்கு கேட்கிறீர்கள் என்று விளாசி எடுத்தார்.
எங்களை இப்படி கேள்வி கேட்கிறீங்களே..திமுகவை கடுமையாக விமர்சித்த ராஜிவ்காந்தி திமுக மாணவர்அணி தலைவராக இருக்கிறார். சக்கர நற்காலி சதிகாரன் கருணாநிதி என்று பேசிய அவரை எப்படி திமுக மாணவர் அணி தலைவர் ஆக்கலாம். இதை அறிவாலயத்திற்கு சென்று நீங்கள் கேட்டு இருந்தால் மானமுள்ள உபி என்று ஒத்துக்கொள்கிறோம் என்றார் .
திமுகவை கடுமையாக விமர்சித்த ராஜிவ்காந்தி திமுக மாணவர்அணி தலைவராக இருக்கிறார் சர்க்கரை நற்காலி சதிகாரன் கருணாநிதி என்று பேசிய அவரை எப்படி மாணவர்அணி தலைவர் ஆக்கலாம் அறிவாலயத்திற்கு சென்று நீங்கள் கேட்டு இருந்தால் மானமுள்ள உபி என்று ஒத்துக்கொள்கிறோம் .#நாதாகவிடம்_பயந்த_திமுக pic.twitter.com/EH89LV3pcY
— 𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 (@ntkwillpower) February 26, 2023