மதுரையில் அழகிரியிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

 
az

மதுரையில் சகோதரர் மு. க. அழகிரி இடம் நலம் விசாரித்து இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.   பதிலுக்கு அழகிரியும் முதல்வரிடம் நலம் விசாரித்து இருக்கிறார். ஆட்சிக்கு வந்து 20 மாதங்களுக்கு பின்னர் அழகி உடன் பேசி இருக்கிறார் முதல்வர்.  இன்னும் சொல்லப்போனால் பல வருடங்களுக்குப் பிறகு அழகிரியுடன் பேசி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

மறைந்த கருணாநிதி  திமுக தலைவராக இருந்தபோது  முன்னாள் மத்திய அமைச்சர் மு.க .அழகிரியால் கட்சிக்குள் ஏற்பட்ட குளறுபடிகளால் அழகிரியை கட்சியை விட்டு நீக்கினார் கருணாநிதி.   அதன்பின்னர்  கருணாநிதியின் மறைவை அடுத்து அழகிரி பாஜக மற்றும் அதிமுகவில் இணையப் போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. 

 கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அவர் தனிக் கட்சி தொடங்க போகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் தினமும் அவர் வீட்டு முன்பு குவிந்து வந்தனர்.  ஆதரவாளர்களை கூட்டி ஆலோசனைக் கூட்டமும் நடத்தினார் அழகிரி .  ஆனாலும் கடைசி நேரத்தில் அவர் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பிக்கவில்லை.   ஆனாலும் ஸ்டாலின் முதல்வராக விடமாட்டேன் என்று சபதம் போட்டார் அழகிரி .  அதனால் தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்ப்பு இருந்தது.   கடைசியில் ஸ்டாலினுக்கு எதிராக அவர் எந்த அறிவிப்பும் செய்யவில்லை பிரச்சாரமும் செய்யவில்லை.

a

 அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு. க. ஸ்டாலின் முதல்வரானார்.   முதல்வராக பதவியேற்பு விழாவிற்கு  அழகிரி வரவில்லை . அவரது மகனும் மகளும் மட்டுமே வந்திருந்தனர்.   திமுக ஆட்சிக்கு வந்து 20 மாதங்களுக்கு மேல் ஆன பின்னரும் கூட ஸ்டாலின் -அழகிரி சந்திப்பு நிகழவே இல்லை .  

ஒரு துக்க வீட்டில் இருவரும் பங்கேற்றபோதும் கூட இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவில்லை .  அண்மையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆன பின்னர் மதுரை சென்று அழகிரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.   இந்த நிலையில் வரும் மார்ச் மற்றும் மார்ச் மாதம் ஐந்து மற்றும் ஆறு தேதிகளில் மதுரையில் கள ஆய்வு மேற்கொள்ளவிற்கும் முதல்வர் அழகிரியை சந்திப்பாரா என்று கேள்வி எழுந்தது.

கடந்த மாதம் 22ம் தேதி அழகிரியிடம்,  மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின் தங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற  செய்தியாளர்களின் கேள்விக்கு,   முதலமைச்சர்  என்னை சந்திப்பாரா என்பது பற்றி எனக்கு தெரியாது என்று கூறினார்.

aa

 முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சியர்கள் காவல்துறை அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் இரண்டு நாட்கள் மதுரையில் நடந்தது.   ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று இருந்த முதல்வர் அழகிரி வீட்டிற்கு செல்லலாம் என்ற தகவல் பரவியது.  இதை அடுத்து முன் நடவடிக்கையாக அழகிரி வசிக்கும் பகுதியில் மாநகராட்சி சார்பில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  சாலை பராமரிப்பு பணிகள் நடந்தன.  இத்தனை நடந்தும் முதல்வர் ஸ்டாலின் அழகிரி வீட்டிற்கு செல்லவில்லை. 

 ஆய்வுக்கூட்டத்தை நேற்று முடித்த முதல்வர் ஸ்டாலின்,   அரசு விருந்தினர் மாளிகையில் சென்று ஓய்வெடுத்தார்.  அந்த நேரத்தில் அழகிரியை அவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.  உடல் நலம் குறித்து விசாரித்து இருக்கிறார்.  பதிலுக்கு அழகிரியும் ஸ்டாலினிடம் உடல் நலம் குறித்து விசாரித்து இருக்கிறார்.  முதுகு வலி பிரச்சனையால் சில தினங்கள் அழகிரி அவதிப்பட்டு வருவதை அறிந்த முதல்வர் ஸ்டாலின் அது குறித்து அதிகம் விசாரித்து இருக்கிறார்.