தேர்தல் ஆணையத்தின் பாரபட்சம் ஆரம்பத்திலேயே தெரிகிறது... சத்தீஸ்கர் முதல்வர் குற்றச்சாட்டு

 
பூபேஷ் பாகல்

தேர்தல் ஆணையத்தின் பாரபட்சம் ஆரம்பத்திலேயே தெரிகிறது என்று சத்தீஸ்கர் முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. உத்தர பிரதேசம் நொய்டாவில் வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்தார். அந்த பிரச்சாரத்தின் போது, கோவிட் விதிமுறைகளை மீறியதாக பூபேஷ் பாகல் மற்றும் மற்றவர்களுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஆளும் பா.ஜ.க.வுக்கு தேர்தல் ஆணையம் சார்புடையதாக (ஆதரவாக)  இருப்பதாக பூபேஷ் பாகல் குற்றம் சாட்டினார்.

பா.ஜ.க.

இது தொடர்பாக பூபேஷ் பாகல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் டெமோ (செயல்முறை விளக்கம்) கொடுக்க வேண்டும். நாங்கள் அதை அப்படியே செய்வோம். ஐந்து நாட்களாக அம்ரோஹாவில் பா.ஜ.க.வினர் வீடு வீடாக பிரச்சாரம் செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நான் நேற்றுதான் (நேற்று முன்தினம்) பிரச்சாரம் செய்தேன். தேர்தல் ஆணையம் நியாயமானதாக இருக்க வேண்டும். எனக்கு மட்டும் எப்.ஐ.ஆர். போட்டது ஏன்? தேர்தல் பிரச்சாரம் எப்படி இப்படி நடக்கும்? அம்ரோஹாவில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரத்துக்கு எதிராக எப்.ஐ.ஆர். ஏன் வரவில்லை (போடவில்லை)?. 

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையத்தின் பாரபட்சம் ஆரம்பத்திலேயே தெரிகிறது. நான் மீண்டும் உத்தர பிரதேசம் செல்வேன். என்ன செய்வது? பிரச்சாரம் செய்யாவிட்டால் செய்வீர்களா? சாதியின பெயரால் மற்றவர்கள் அரசியல் செய்கிறார்கள் அல்லது மத அரசியல் செய்கிறார்கள். ஆனால் காங்கிரஸை தவிர வேறு யாரும் சாமானிய மக்களை பற்றி பேசுவதில்லை. இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் முதல் பின்தங்கிய சமூகங்கள் வரை அனைவரையும் அழைத்து செல்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.