அவரு ஒரு நாளைக்கு 2 மணி நேரம்தான் வேலைபார்த்தார்.. நான் 2 மணி நேரம்தான் ரெஸ்ட் எடுக்கிறேன்.. பஞ்சாப் முதல்வர்

 
சரண்ஜித் சிங் சன்னி சரண்ஜித் சிங் சன்னி

முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே பணிபுரிந்தார். ஆனால் நான் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டும் ஓய்வெடுக்கிறேன் என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்தார்.

இந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பேசுகையில் கூறியதாவது: எங்கள் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே பணிபுரிந்தார். ஆனால் நான் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டும் ஓய்வெடுக்கிறேன். இதுதான் வித்தியாசம். தற்போது தகவல் தொடர்பு இருப்பதால் புதிய அமைப்பு பயனுள்ளதாக உள்ளது. 

கேப்டன் அமரீந்தர் சிங்

முன்பு முதல்வர் எப்போழுது விழிப்பார் என்று ஆச்சரியப்படுவார்கள். நீங்கள் எப்போது தூங்குகிறீர்கள் என்று மக்களிடம் என்னிடம் கேட்கிறார்கள். பஞ்சாப் முதல்வராக என் பெயர் அறிவிக்கப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதை என்னிடம் சொன்னபோது நான் தொலைபேசியில் அழுதேன். அது மகிழ்ச்சியில் அழுததா அல்லது என்ன என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் அழுதேன் என்று எனக்கு தெரியும். 

காங்கிரஸ்

இந்தியாவில் எளிய குடும்பத்தில் பிறந்த ஒரு சாதாரண குடிமகனும் முதல்வராக முடியும். இதுவே ஜனநாயகத்தின் சான்று. அனைவரும் சமமாக இருக்க வேண்டிய சமூகம் உருவாக வேண்டும். இந்தியாவில் சாதி அமைப்பை தாண்டி நாம் உயர வேண்டும். காங்கிரஸ் தலித் ஒருவரை முதல்வராக நியமித்திருந்தால், அந்த யோசனையை நாம் வரவேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.