முகத்தில் கரியை பூசிக்கொண்டு வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்

 
ஆ

 முகத்தில் கரியை பூசிக்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார் வேட்பாளர் ஆறுமுகம்.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வித்தியாசமான பிரச்சாரம் பரபரப்பை  ஏற்படுத்தி இருக்கிறது. 

 மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆறுமுகம் என்பவர் வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார்.  ஆறுமுகம் விரும்பி கேட்ட சின்னமான தம்ளர் சின்னமே கொடுக்கப்பட்டிருக்கிறது.   அதனால் அந்த சின்னத்தை காட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ஆறுமுகம்.  அவர் முகத்தில் கரியை பூசிக்கொண்டு வாக்கு சேகரித்து வருவது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 தான் முகத்தில் ஏன் கரியை பூசிக்கொண்டு வாக்கு சேகரிக்கிறேன் என்பது குறித்து அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.  மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்ல பாண்டியணும் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

ந்

 அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில்,  ஈரோட்டு இடைத் தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலாவை மிஞ்சும் அளவுக்கு ஈரோட்டு இடைத்தேர்தல் ஃபார்முலா போய்க்கொண்டிருக்கிறது.  திமுகவும் அதிமுகவும் வாக்காளர்களுக்கு மாறி மாறி குக்கர், பட்டு புடவை ,கொலுசு,  வெள்ளி டம்ளர் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்களை கொடுக்கிறார்கள்.  

இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள்  சென்றிருக்கின்றன.   ஆனாலும் தேர்தல் ஆணையத்திடம் இந்த புகார் ஆதாரத்துடன் எத்தனை பேர் முறையிட்டாலும் மற்ற வேட்பாளர்கள் முகத்தில் கரியை பூசி இருக்கிறது.  எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கரியை பூசி இருக்கிறது தேர்தல் ஆணையம்.   இதனால் தான் தேர்தல் ஆணையம் கரியை பூசி விட்டது என்பதை சொல்வதற்காக முகத்தில் கரியை பூசிக்கொண்டு பிரச்சாரம் செய்கிறேன் என்கிறார்.

தேர்தல் ஆணையம் துணை இராணுவப்படையை கையில் வைத்திருக்கிறது. மாநில காவல் துறையும்  தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. ஆனாலும் பரிசு பொருள்கள்,  பணம் விநியோகம் செய்வது தங்கு தடை இன்றி நடக்கிறது.   தேர்தல் ஆணையம் இதையெல்லாம் கவனித்து நடவடிக்கை எடுக்காமல்  வேட்பாளர்கள் முகத்தில் கரியை பூசி விட்டது.   

 வாக்காளர்களை அடைத்து வைத்து சினிமா காட்டி கறி சோறு கொடுக்கிறார்கள் .  இதை எல்லாம் பார்த்து ஜனநாயகம் செத்துவிட்டது என்று வேதனையில் இருக்கிறோம். இந்த மாதிரியான செயலை வெளிக்காட்டும் வகையில் தான் முகத்தில் கரியை பூசிக்கொண்டு வாக்கு சேகரிக்கிறோம் என்கிறார்கள்.