நம்ம அமைச்சர் இப்படி பேசலாமா? நேருவால் 4 எம்.எல்.ஏக்கள் அதிருப்தி
அமைச்சர் கே. என். நேருவால் 4 எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் அமைச்சர் நேரு பங்கேற்ற கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் எட்டு திமுக எம்எல்ஏக்கள் உள்ளனர். திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் நேருவும், திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் மகேஷ், ஸ்ரீரங்கம் தொகுதியில் பழனியாண்டியும், துறையூர் தொகுதியில் ஸ்டாலின் குமாரும், லால்குடி தொகுதியில் சௌந்தரபாண்டியன், திருச்சி கிழக்கு தொகுதியில் இனிகோ இருதயராஜ், மணச்சநல்லூரில் கதிரவனும், முசிறியில் தியாகராஜன் என 8 திமுக எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இவர்களில் அமைச்சர் நேரு மற்றும் அமைச்சர் மகேஷ் ஆதரவாளர்களாக ஆறு எம்எல்ஏக்கள் இருந்தார்கள். அவர்களில் மூன்று பேர் தற்போது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களாக மாறி இருக்கிறார்கள். இதனால் மிச்சம் இருப்பவர்களில் யார் கை ஓங்கி இருக்கிறது என்பதில் அமைச்சர்கள் நேருவுக்கும் மகேஷ்க்கும் இடையே பனிப்போர் நடக்கிறது என்கிறார்கள்.
திருச்சி மாவட்டத்தில் மூன்று எம்எல்ஏக்கள் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களாக மாறியிருக்கும் தகவல் அமைச்சர் நேருவுக்கு கடும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. இதனால் அவர் அந்த எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று ஆவேசமாக
இந்த தகவல் தெரிந்ததும் அலறி அடித்துக் கொண்டு அமைச்சரின் ஆதரவு மாவட்ட செயலாளரிடம் ஓடி, நம்ம அமைச்சர் இப்படி பேசலாமா என்று கேட்டிருக்கிறார்கள் அந்த எம்எல்ஏக்கள். மாவட்டச் செயலாளரும் இதை அமைச்சரிடம் சென்று , எம்எல்ஏக்களின் புலம்பலை எடுத்துச் சொல்லி இருக்கிறார். அதற்கு அமைச்சர், நான் அவர்களைச் சொல்லவில்லை என்று சமாதானப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் கூட அந்த எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் . இந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாகத்தான் அமைச்சர் நேருவின் நிகழ்ச்சியை அவர்கள் புறக்கணித்து உள்ளார்கள். அரசு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி திருச்சி நடந்த போது அமைச்சர்கள் நேரு ,மகேஷ் பார்வையிட்டு உள்ளார்கள். அந்த நான்கு எம்எல்ஏக்களும் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து உள்ளார்கள்.