உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மாயாவதி போட்டியிட மாட்டார்.. பகுஜன் சமாஜ் கட்சி தகவல்

 
நானும் மாற போறேன்.. என் கூடவும் நிறைய பேர் மதம் மாறுவாங்க! மாயாவதி பரபரப்பு தகவல்

எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி போட்டியிட மாட்டார் என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த உடனேயே அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் மாயாவதி போட்டியிட மாட்டார் என்று பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.

சதீஷ் சந்திர மிஸ்ரா

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. சதீஷ் சந்திர மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பகுஜன் சமாஜ் கட்சி தலைவி, தேர்தல் நடைபெறும் 5 மாநிங்களில் கட்சியின் வெற்றியை உறுதி செய்வார். அதேநேரத்தில் நான் கட்சியின் பிரச்சாரம் மற்றும் தேர்தல் வியூகங்களிலும் கவனம் செலுத்துவேன். உத்தர பிரதேசத்தில் எங்கள் கட்சி அடுத்த அரசாங்கத்தை அமைக்கும்.

வெங்கையா நாயுடு சொன்னதை மோடி அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும்.. பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தல்..

நானும், முன்னாள் முதல்வர் மாயாவதியும் எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மாட்டோம். சமாஜ்வாடி கட்சிக்கு 400 வேட்பாளர்கள் இல்லை என்றால், அவர்கள் 400 இடங்களை எப்படி வெல்வார்கள்? சமாஜ்வாடியோ அல்லது பா.ஜ.க.வோ ஆட்சிக்கு வராது. உத்தர பிரதேசத்தில் அடுத்து பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி அமைக்கப் போகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.