கட்டுக் கட்டாக பணம்? அண்ணாமலை விளக்கம்

 
h

வழக்கம் போல் காரில் செல்லாமல் நேற்று திடீரென்று அண்ணாமலை ஹெலிகாப்டரில் சென்று இறங்கியதால் அவர் வந்த ஹெலிகாப்டரில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது என்று எதிர் கட்சியினர் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.  இதை அண்ணாமலை மறுத்திருக்கிறார் . காரில் வராமல் ஹெலிகாப்டரில் ஏன் சென்றேன்  என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

he

 கர்நாடக மாநிலத்தில் வரும் மே பத்தாம் தேதி அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.  ஆளும் பாஜக , ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது.  இழந்த ஆட்சியைப் பிடித்து விட காங்கிரஸ் கடும் போட்டி போட்டு வருகிறது .  மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் களமிறங்கி இருக்கிறது. 

 மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 86 தொகுதிகள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பொறுப்பில் விடப்பட்டிருக்கிறது.  இதற்காக அவர் கர்நாடக மாநிலத்தில் தீவிர சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார் . வாக்கு சேகரிப்புக்காக தேர்தல் பணிக்காக பெரும்பாலும் காரிலேயே சென்று வந்த அண்ணாமலை நேற்று திடீரென்று ஹெலிகாப்டரில் உடுப்பிக்கு சென்று இருக்கிறார். 

a

 அண்ணாமலையின் இந்த ஹெலிகாப்டர் பயணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  அவர் சென்ற ஹெலிகாப்டரில் பைகளில் கட்டுக் கட்டாக பணம் எடுத்துச் செல்லப்பட்டது என்று உடுப்பி மாவட்ட கப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் சொர்கி குற்றம் சாட்டியிருக்கிறார்.   காங்கிரசின் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்த நிலையில் அண்ணாமலை இதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார்.

86 தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் வேலைகளை செய்ய வேண்டி இருந்ததால் கால விரயத்தை குறைப்பதற்காகவே ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன். மற்றபடி எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துவது போல் வேறு ஒன்றும் காரணம் இல்லை.  எங்கள் வெற்றி உறுதியாகி விட்டதால் தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்கள்.   தோல்வி பயத்தால் ஏற்பட்டுள்ள மன அழுத்தம் காரணமாகத்தான் எங்கள் மீது இப்படி குற்றம் சாட்டுகின்றார்கள்  என்று அண்ணாமலை விளக்கம் அளித்திருக்கிறார்.