கருப்பு மாஸ்க் - சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பரபரப்பு

 
m

சட்டப்பேரவையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு மாஸ்க் அணிந்து  வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.  

 நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விருத்தாசலம் சிறுமி பாலியல் சம்பவம் குறித்து அரசின் கவனத்தை எதிர்த்து பேசினார்.  அவரின் பேச்சு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை.   இதை அதிமுக கொறடா எஸ்பி வேலுமணியும் சட்டசபையில் பேசினார்.

e

 அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு தொடர்ந்து நேரலையில் காட்டப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு, உடனே சபாநாயகர்,  இது குறித்து உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்னிடம் கூறியிருக்கிறார்.  நான் செயலாளரிடம் அது குறித்து விசாரிக்க சொல்லி இருக்கிறேன் என்று பதில் அளித்தார்.

 இதை தொடர்ந்து பேசிய எஸ் பி வேலுமணி,   எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு நேரலையில் தடை செய்யப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று தெரிவித்தார். அதன் பின்னர் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள்.  

sp

 இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதை  நேரலையில் காட்டாததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவைக்கு இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு மாஸ்க் அணிந்து வந்து பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றனர்.