நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை... என் படத்தை, பெயரை அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது.. ராகேஷ் டிக்கைட்

 
சிறு துளி கண்ணீரால் யோகி அரசின் சதியை முறியடித்த ராகேஷ் திகேத் யார்?

நான் எந்தவொரு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, என் படத்தை மற்றும் பெயரை எந்த அரசியல் கட்சிகளும் பயன்படுத்தக்கூடாது என்று ராகேஷ் டிக்கைட் அறிவித்துள்ளார்.

மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ததையடுத்து கடந்த ஒராண்டுக்கு மேலாக டெல்லியின் பல எல்லைகளில் போராட்டத்தை நடத்தி வந்த விவசாயிகள் அண்மையில் வீடு திரும்பினர். எல்லைகளில் பாரதிய கிசான் சங்கத்தின் ஆதரவாளர்களை வழிநடத்திய அந்த சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகேஷ் டிக்கைட்டும் மீரட்டில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். 

கூடாரங்களை அகற்றும் விவசாயிகள்

மீரட்டில் ராகேஷ் டிக்கைட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அரசியல் கட்சிகள் தங்களது போஸ்டர்களில் எனது புகைப்படங்களையோ, பெயரையோ பயன்படுத்த வேண்டாம். நான் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியும் என் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ தங்கள் சுவரொட்டிகளில் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேர்தல்

ராகேஷ் டிக்கைட் முன்பு டெல்லி காவல்துறையில் தலைமை காவலராக பணிபுரிந்தார். ஆனால் 1992-93ல் பதவி விலகினார். 2007ல் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் முசாபர்நகரில் உள்ள கட்டௌலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக ராகேஷ் டிக்கைட் போட்டியிட்டார். மேலும் 2014ல் மக்களவை தேர்தலில் அம்ரோஹா மாவட்டத்தில் இருந்து ராஷ்ட்ரிய லோக் தளம் சார்ப்பில் போட்டியிட்டார். இந்த 2 தேர்தல்களிலும் ராகேஷ் டிக்கைட் வெற்றி கனியை பறிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.