சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல்.. மேயர் பதவியை தக்க வைத்த பா.ஜ.க.. ஏமாந்த ஆம் ஆத்மி

 
பா.ஜ.க.

சண்டிகர் மாநகராட்சியின் புதிய மேயராக பா.ஜ.க.வின் சரப்ஜித் கவுர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சண்டிகர் மாநகராட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 24ம் தேதி நடைபெற்றது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அந்த மாதம் 27ம் தேதியன்ற எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 35 வார்டுகளில் ஆம் ஆத்மி அதிக வார்டுகளை கைப்பற்றியுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி, சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிகபட்சமாக 14 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க. 12 வார்டுகளை கைப்பற்றியது. இதனால் ஆம் ஆத்மி கட்சி சேர்ந்தவர் புதிய மேயராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆம் ஆத்மி

இந்நிலையில் சண்டிகர் மாநகராட்சி மேயருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிலிருந்து மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். மேயர் தேர்தலில் மொத்தம் 28 ஒட்டுக்கள் பதிவாகின. இனையடுத்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன. பா.ஜ.க.வுக்கு 14 வாக்குகளும், ஆம் ஆத்மிக்கு 13 வாக்குகளும், ஒ வாக்கு செல்லாது என்று அதிகாரி அறிவித்தார். இதனையடுத்து சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜ.க. சார்பாக போட்டியிட்ட சரப்ஜித் கவுர் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சண்டிகர் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் வாக்குப்பதிவு செயல்முறை குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் அவையில் சலசலப்பை ஏற்படுத்தினர். இதன் காரணமாக அவர்களை (ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்) அகற்ற போலீசார் அழைக்கப்பட்டனர். சண்டிகர் மாநகராட்சியின் முன்னாள் மேயரான பா.ஜக.வின்  ரவி கே சர்மா ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.