“கடந்தமுறை 20 சீட்டுகள்! இம்முறை 40 சீட்டுகள் வேண்டும்”- அதிமுகவுக்கு பாஜக செக்

 
eps eps

அ.தி.மு.க.வுடன் பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் விரைவில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணியை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற  கட்சிகள் எவ்வாறு பார்க்கின்றன? - BBC News தமிழ்

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே களை கட்ட தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக கடந்த 2023-ஆம் ஆண்டு பிரிந்த அதிமுக- பாஜக கூட்டணி தற்போது மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. அதிமுகவும் பாஜகவும் இணைந்து, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். அதேசமயம் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் உரிமைகளை அ.தி.மு.க ஒருபோதும் விட்டுக் கொடுக்காது எனவும் 2026 தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் எனவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் பல கட்சிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுக கூட்டணியிலிருந்து SDPI அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.


இந்நிலையில் அ.தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை செப்டம்பர் மாதம் தொடங்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி பங்கீடுப் பேச்சுவார்த்தைக்காக பா.ஜ.க. சார்பில் விரைவில் குழு அமைக்கப்பட உள்ளது. தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் போராட்டங்களை அ.தி.மு.க-பா.ஜ.க இணைந்து முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் 40 சட்டமன்ற தொகுதிகள் வரை கேட்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 20 தொகுதிகளை பா.ஜ.க. பெற்ற நிலையில், இம்முறை 40 சீட்டுகள் கேட்க திட்டமிட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே அ.தி.மு.க.வுடன் இணைந்து பிரச்சாரத்தை தொடங்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.