தலைமை தளபதி பிபின் ராவத் மறைவு குறித்து ஒரு வார்த்தை பேசாத நவ்ஜோத் சிங் சித்து.. வெளுத்து வாங்கிய பா.ஜ.க.

 
நவ்ஜோத் சிங் சித்து

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு ஒரு இரங்கல் வார்த்தை தெரிவிக்காத பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

கடந்த புதன்கிழமையன்று குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் உள்பட மொத்தம் 13 பேர் உயிர் இழந்தனர். பிபின் ராவத் உள்ளிட்டோர் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்பட நாட்டின் பல முக்கிய தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். ஆனால் பிபின் ராவத் மறைவுக்கு பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஒரு சிறு வருத்தம் தெரிவிக்கவில்லை.

பிபின் ராவத்

அதேசமயம், நவ்ஜோத் சிங் சித்து டிவிட்டரில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை குறிப்பிட்டு நவ்ஜோத் சிங் சித்துவை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. பா.ஜ.க.வின் செய்திதொடர்பாளர் நுபுர் சர்மா டிவிட்டரில், ஜெனரல் பிபின் ராவத்தின் அகால மரணம் பற்றி ஒரு  வார்த்தை கூட இல்லை. 

நுபுர் சர்மா

11 சகோதரர்கள் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதியின் மனைவி இறப்பு பற்றி ஒரு வவார்த்தை கூட இல்லை. தற்போது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும்,  தனிமையில் இருக்கும் சகோதரனுக்காக ஒரு பிரார்த்தனை கூட இல்லை. அனைத்து அன்பு, அனைத்து கொண்டாட்டங்கள், அனைத்து பஜ்வா, அனைத்து காங்கிரஸ். ஆம் அது உங்களுக்கான காங்கிரஸ் என்று பதிவு செய்துள்ளார்.