தேர்தல் தோல்வி, அண்ணாமலை செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்கும் பாஜக
தமிழகத்தில் NDA கூட்டணி தோல்விக்கு காரணம் என்ன? `1 இடத்தில்' கூட பாஜக வெற்றி பெறாதது ஏன்? என பாஜக தலைமை விளக்கம் கேட்டுள்ளது.
18-வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக மட்டும் தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதிமுகவுடனான கூட்டணியை முறித்துகொண்டு பாமக, தமாகவுடன் கூட்டணி அமைத்து களம்கண்ட பாஜக தமிழகத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. பிரதமர் தமிழ்நாட்டுக்கு எட்டு முறை வந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே பி நட்டா ரோடு ஷோ நடத்தினார்கள் . இருப்பினும் பாஜக வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் NDA கூட்டணி தோல்விக்கு காரணம் என்ன? ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாதது ஏன்? என பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம் கேட்டுள்ளார். மாநில தலைவராக அண்ணாமலையின் செயல்பாடு, 2ம் கட்ட தலைவர்கள், நிர்வாகிகளோடு அவரின் அணுகுமுறை உள்ளிட்டவை குறித்தும் அவர் அறிக்கை கேட்டுள்ளார்.