பாஜக ஏற்கனவே தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது- பொன்.ராதாகிருஷ்ணன்

 
pon radha

ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

pon

சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றடு. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “1996ல் பாஜக தனித்து போட்டியிட்டு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றது உங்களுக்கும் தெரியும். இதற்கு மேல் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 2 கோடி தொண்டர்கள் கட்சியில் உள்ளதாக அதிமுக சொல்கிறது, அதனால் 2 கோடி கருத்துக்கள் கூட வரலாம். அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி கூறியது அவரது சொந்த கருத்து. கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும், அது அவர்களின் விருப்பம். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாஜகவினர் அனைவரும் முழு மூச்சோடு அடுத்த 7 மாதத்திற்கு உழைக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இன்றிய ஆலோசனை கூட்டத்தில் பேசியிருக்கிறோம்.


ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 5 மாநில தேர்தல் வருகிறது, அதில் பாஜக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதிமுக, பாஜக கூட்டணி முறிவால் எந்த பின்னடைவும் இல்லை. பாஜக ஏற்கனவே தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. வரும் தேர்தலில் பாஜக ஆச்சரியமளிக்கும் வகையில் வெற்றிகளை பெறும்” என்றார்.