"திமுக-காங்கிரஸ் உறவில் விரிசல்; பயத்தில் திருமா" - என்ன நடக்கிறது கூட்டணிக்குள்?

 
திமுக கூட்டணி

சென்னையிலுள்ள பெரியார் திடலில் விசிக சார்பில் 2021ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருதையும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பெரியார் விருதையும் திருமாவளவன் வழங்கினார். பின்னர் உரையாற்றிய அவர், "2024 மக்களவை தேர்தலில் தப்பித் தவறி பாஜக வென்று மீண்டும் ஆட்சியை அமைத்தால், இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. தமிழ்நாட்டிற்கும் அது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். 

DMK finalises constituencies for MDMK, IUML and three other allies | The  News Minute

இந்த கூட்டத்தின் மூலம் தமிழக முதல்வர் அண்ணன் மு.க. ஸ்டாலினுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்று தான். அகில இந்தியா அளவில் பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்து அரசியல் சக்திகளையும் ஒருங்கிணைக்கும் ஆற்றலும் தகுதியும் முதல்வர் ஸ்டாலினுக்கு தான் இருக்கிறது. காங்கிரஸ், பாஜக இல்லாத ஒரு அணியை உருவாக்க வேண்டும் என ஒரு சிலர் முயல்கின்றனர். ஆனால், திமுக அப்படிப்பட்ட முயற்சிக்குத் துணைநின்று விடக் கூடாது என உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன். 

IIT suicide: BJP leader's questions to Stalin (AUDIO) - Lotus Times |  Madurai | Tamilnadu | Lotus Times

காங்கிரஸ் இல்லாத ஒரு அணியை உருவாக்கினால் அது பாஜகவுக்கே சாதமாக அமையும். அப்போது மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும். கருணாநிதியைப் போல இருந்து ஸ்டாலின் செயல்பட வேண்டும் என்பதே விசிக வைக்கும் கோரிக்கை" என்றார். இதனை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார் பாஜக ஆதரவாளர் நாராயணன் திருப்பதி. அந்த ட்வீட்டில், "தொல் திருமாவளவன் பேச்சிலிருந்து மூன்று விஷயங்கள் தெளிவாகிறது. காங்கிரஸ் - திமுக உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.


திரு. தொல் திருமாவளவனுக்கு பாஜகவின் வளர்ச்சியை கண்டு அச்சம் அதிகமாகியுள்ளது. பாஜக வளர்வதை தடுக்க, ஒன்றரை லட்சம் 'தமிழர்களை' கொன்று குவிக்க துணை நின்ற காங்கிரஸ் கட்சியின்  கூட்டணியே முக்கியம், அதாவது தமிழினத்தை விட 'அரசியல் அதிகாரம் மற்றும் ஆதிக்கமே' முக்கியம் என்ற நிலைப்பாட்டில் திருமாவளவன் உள்ளார். தமிழா! தமிழா! இதுவல்லவோ தமிழின துரோகம்?" என்று குறிப்பிட்டுள்ளார்.