அதிமுகவிடமுள்ள 4 தொகுதிகளை மாற்றி தரக்கோரி பாஜகவினர் நிர்பந்தம்- பழனிசாமியை புறக்கணித்த நயினார்

 
s

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியாக அதிமுக மற்றும் பாஜக பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கி இருக்கிறது. 

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் : நயினார் நாகேந்திரன் உறுதி -  nainar nagendran says edappadi palaniswami is the chief ministerial  candidate in nda alliance - Samayam Tamil
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அதிமுக வலுவாக உள்ள கன்னியாகுமரி மாவட்டம் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் தொகுதிகளை பெற்றிருக்கிறார்கள்.  இருந்த போதிலும் அதிமுகவினர் வைத்திருக்கக்கூடிய ஒரு சில தொகுதிகளையும் தங்களுக்கு வேண்டுமென பாஜகவினர் நிர்பந்தித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தென் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்பொழுது நெல்லையில் உள்ள ஆர் ஆர் இன் ஓட்டலில் தங்கி இருக்கிறார். 


அவரை சந்தித்து முதல் கட்டமாக அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட பழனி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளை தங்களுக்கு மாற்றி தர கோரி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை செய்ய காலை முதல் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதிமுகவினர் தங்களது தொகுதிகளை விட்டுக் கொடுக்க முடியாத சூழல் இருந்ததால் நெல்லையில் இருந்து கொண்டே பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க வராமல் புறக்கணித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மதியம் 3:45 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக புறப்பட்டுச் சென்றார்.