500 ஆண்டுகளுக்கு முன் எங்கள் கோயிலுக்கு முன்னாள் மசூதிகளை ஏன் கட்ட வேண்டும்?... பா.ஜ.க. எம்.பி. கேள்வி

 
மதுரா மசூதி விவகாரத்தில் பா.ஜ.க. சம்பந்தபடவில்லை… அமித் ஷா விளக்கம்

500 ஆண்டுகளுக்கு முன் எங்கள் கோயிலுக்கு முன்னாள் மசூதிகளை ஏன் கட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்பி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் பா.ஜ.க. எம்.பி. ரவீந்திர குஷ்வாஹா.

உத்தர பிரதேசம் மதுராவில் பா.ஜ.க. எம்.பி. ரவீந்திர குஷ்வாஹா பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசால் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடிந்தால், மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமியில் பிரம்மாண்ட கோயில் கட்டுவதற்கு வசதியாக வழிபாட்டு தலங்கள் சட்டம் (சிறப்பு விதிகள்) 1991ஐ திரும்ப பெறலாம். பா.ஜ.க. ஆரம்பம் முதலே அயோத்தி, காசி (வாரணாசி) மற்றும் மதுரா குறித்து தெளிவான பார்வை கொண்டுள்ளது. இந்த மூன்றும் எங்களுக்கு நம்பிக்கைக்குரிய விஷயம். 

ரவீந்திர குஷ்வாஹா

எங்கள் மதம் இந்த மத இடங்களுடன் தொடர்புடையது. எங்கள் பூர்வீகம் இந்த (மதுரா) இடத்திலிருந்து வந்தது. இது நாட்டின் பெருமைக்குரிய விஷயம். மதுரா விடுவிக்கப்படும். ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் எங்கள் கோயிலுக்கு முன்னாள் மசூதிகளை ஏன் கட்ட வேண்டும்?. அயோத்தி முடிவு செய்யப்பட்டது. காசி விஸ்வநாதர் கோயிலில் வேலை நடந்து ரகொண்டு இருக்கிறது. இப்போது அது மதுராவின் முறை. அவர்களின் பைகம்பர் எந்த எந்த பிறந்தார், அந்த இடத்தில் மசூதி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கேசவ் பிரசாத் மவுரியா

உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கடந்த வாரம் டிவிட்டரில், தற்போது அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டும் பணியை அரசு தொடங்கியுள்ள நிலையில், காசி மற்றும் மதுரா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று பதிவு செய்து இருந்தார். அதாவது காசி மற்றும் மதுராவில் கோயில்கள் கட்டப்படும் என்று மறைமுகமாக கூறியிருந்தார்.