நாடாளுமன்றத்துக்கு மதுபான பாக்சுடன் வந்து கெஜ்ரிவால் அரசாங்கத்தை சாடிய பா.ஜ.க. எம்.பி.

 
தேவையில்லாமல் வாய் விட்டு சிங்கப்பூரிடம் வாங்கி கட்டிக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

நாடாளுமன்ற மக்களவைக்கு பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா மதுபான பெட்டியுடன் வந்து, சுத்தமான தண்ணீரை வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக மக்களுக்கு மதுவை வழங்குகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தை தாக்கி பேசினார்.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் ஜீரோ நேரத்தில் பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா பேசுகையில் மதுபான பாக்சை காட்டி மிகவும் ஆவேசமாக பேசினார். பர்வேஷ் வர்மா பேசியதாவது: டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கம், புதிய மற்றும் சுத்தமான தண்ணீரை வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக மக்களுக்கு மதுவை வழங்குகிறது. கோவிட்-19 தொற்றுநோய் 2வது அலையின் போது டெல்லி மக்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற துடித்தபோது, டெல்லி அரசாங்கம் மதுபான நுகர்வு குறித்து புதிய கலால் கொள்கையை வரைவதில் மும்முரமாக இருந்தது. 

பர்வேஷ் வர்மா

கோவிட்-19ன் போது 25 ஆயிரம் பேர் இறந்தபோது,  டெல்லி அரசாங்கம் யூனியன் பிரதேசத்தில் மது அருந்துவதை அதிகரிக்கும் நோக்கத்துடன் புதிய கலால் கொள்கையை உருவாக்குவதில் மும்முரமாக இருந்தது. இன்று புதிதாக 824 மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் குடியிருப்பு பகுதிகள், காலனிகள், கிராமங்கள் மற்றும் இணக்கமற்ற மண்டலங்களில் மதுக்கடைகளை திறக்கின்றனர். பிங்க் பார்களில் பெண்கள் அதிகாலை 3 மணி வரை மது அருந்தினால் சலுகை வழங்கப்படும். 

மதுபான கடை

மது அருந்துவதற்கான வயது வரம்பு 25லிருந்து 21 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்னவென்றால், முதல்வர் கெஜ்ரிவால் தனது பிரச்சாரத்தை விரிவுப்படுத்துவதற்காக அதிகபட்ச வருமானம் ஈட்ட விரும்புகிறார். அவர் 2022ல் நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்துக்காக அங்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் மது கலாச்சாரத்தை ஒழிப்பேன் என்று கூறினார். ஆனால் டெல்லியில் மது அருந்துதல் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.