அதிமுக கூட்டணில் இரட்டை இலக்கம் கேட்கும் பாஜக

 
eps eps

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை பெற்று இரட்டை இலக்கத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு செல்வது உறுதி என்று பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி எல் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் இன்று தமிழக பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களின் பயிற்சி முகாம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி எல் சந்தோஷ் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாநில தலைவரும், அமைப்பு பொதுச்செயலாளரும் அவர்களுடைய பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும். எல்லா வேலைகளையும் ஒருவர் மீது திணிக்க கூடாது என்றும் வேலைகளை தனித்தனியாக பிரித்து கொடுத்து அது முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். அனைத்தும் தெரிந்த தலைவர் யாருமில்லை எனவே அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்தி செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை பெற்று இரட்டை இலக்கத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு செல்வது உறுதி என்றார். எத்தனை தொகுதிகளை அதிமுக கூட்டணியில் பெறுகிறோம் என்பதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் தற்போது கட்சியை வலுப்படுத்த அடிப்படை பணிகளில் ஒற்றுமையுடன் அனைவரும் முழு வீச்சில் ஈடுபட வேண்டும் என்றார்.