அமெரிக்காவுக்கு போய் ராகுல் காந்தியை புகழ்ந்து பேசுங்க… சிவ சேனாவை கிண்டலடித்த பா.ஜ.க….

 

அமெரிக்காவுக்கு போய் ராகுல் காந்தியை புகழ்ந்து பேசுங்க… சிவ சேனாவை கிண்டலடித்த பா.ஜ.க….

ராகுல் காந்தி குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கருத்து கூறிய விவகாரத்தில், அமெரிக்காவுக்கு போய் ராகுல் காந்தியை புகழ்ந்து பேசுங்க என்று சிவ சேனாவை பா.ஜ.க. கிண்டலடித்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தி பிராமிஸ்டு லேண்ட் என்ற பெயரில் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் பல்வேறு உலக தலைவர்கள் குறித்தும் தனது எண்ணத்தையும் கூறியுள்ளார். அதில் ராகுல் காந்தி குறித்து, ஈர்க்க ஆர்வமாக இருப்பார் ஆனால் ஒரு விஷயத்தில் தேர்ச்சி பெறுவதற்கான திறமை அல்லது வேட்கை இல்லை என்று ஒபாமா குறிப்பிட்டு உள்ளார்.

அமெரிக்காவுக்கு போய் ராகுல் காந்தியை புகழ்ந்து பேசுங்க… சிவ சேனாவை கிண்டலடித்த பா.ஜ.க….
ஷானாவாஸ் உசேன்

ராகுல் காந்தி தொடர்பான ஒபாமாவின் கருத்துக்கு காங்கிரஸை காட்டிலும் கூட்டணி கட்சியான சிவ சேனா அதிகம் பொங்கியுள்ளது. சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத் இது குறித்து கூறுகையில், இந்திய அரசியல தலைவர்கள் குறித்து வெளிநாட்டு தலைவர்கள் இது போன்ற கருத்துக்களை தெரிவிக்க முடியாது. காங்கிரஸ் தலைவர் குறித்து ஒபாமா கூறியது குறித்த உள்நாட்டு அரசியல் சொற்பொழிவு வெறுக்கத்தக்கது. நாங்கள் டிரம்ப் முட்டாள் என்று சொல்ல மாட்டோம். இந்த தேசத்தை பற்றி ஒபாமாவுக்கு எவ்வளவு தெரியும்? என தெரிவித்து இருந்தார்.

அமெரிக்காவுக்கு போய் ராகுல் காந்தியை புகழ்ந்து பேசுங்க… சிவ சேனாவை கிண்டலடித்த பா.ஜ.க….
சஞ்சய் ரவுத்

ராகுல் காந்திக்கு ஆதரவாக பேசியதற்கு சஞ்சய் ரவுத்தை பா.ஜ.க. கிண்டல் அடித்துள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷானாவாஸ் உசேன் கூறுகையில், பராக் ஒபாமா தனது கருத்தை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார். பராக் ஒபாமாவை சந்தித்து அவர்கள் தரப்பு கருத்தை முன்வைக்க ஒரு குழுவை சிவ சேனா அனுப்ப வேண்டும். அந்த குழுவை தலைவராக இருந்து சஞ்சய் ரவுத் வழிநடத்த முடியும். இங்கே அறிக்கைகளை வெளியிடுவதற்கு பதிலாக, அவர்கள் அங்கு (அமெரிக்கா) சென்று ராகுல் காந்தியை புகழ்ந்து பேச வேண்டும் என்று கிண்டலாக தெரிவித்தார்.