போலீசார் மீது தாக்குதல் நடத்திய பாஜக தலைவர் கைது!

 
arrested

போலீசார் மீது தாக்குதல் கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்ததாகவும் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறி தெலங்கானா மாநில பாஜக தலைவர் உள்பட பாஜகவினரை கைது செய்தனர்.

தெலுங்கானா மாநில பாஜக தலைவர் கைது: பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கண்டனம் |  Dinamalar

தெலங்கானா மாநில  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ள 317 அரசானையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தெலங்கானா மாநில பாஜக தலைவரும் எம்பியுமான பண்டி சஞ்சய் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டம் போலீசார் அனுமதி இல்லாமலும், கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்ததாகவும் கூறி போலீசார், பாஜக தலைவர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பண்டி சஞ்சயை மணகொண்டூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கும் பண்டி சஞ்சய் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். 

காவல் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  இதையடுத்து, மணகொண்டூர் காவல் நிலையத்தில் இருந்த பாண்டி சஞ்சயை, கரிங்கனார் காவல் பயிற்சி மையத்துக்கு போலீசார் கொண்டு சென்றனர். தேசிய பேரிடர் சட்டத்தின் கீழ், பண்டி சஞ்சய் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீஸாரை தாக்கியதாக 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்பி பண்டி சஞ்சய் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு போலீசார் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பண்டி சஞ்சய் கைதுக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.