பீகார் மேலவை தேர்தல்.. பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்குள் உரசல்..

 
பா.ஜ.க.

பீகாரில் விரைவில் நடைபெற உள்ள மேலவை தேர்தலில் போட்டியிடும் இடங்கள் எண்ணிக்கையில் ஆளும் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்குள் உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்.

பீகார் மேலவைக்கான உள்ளாட்சி ஒதுக்கீட்டில் 24 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 24ல் 13 இடங்களில் பா.ஜ.க. போட்டியிட விரும்புகிறது, அதேசமயம் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளமோ 50-50 பார்முலாவில் போட்டியிட விரும்புகிறது. அதாவது 12  இடங்களில் போட்டியிட ஐக்கிய ஜனதா தளம் விரும்புகிறது.

தேர்தல் ஆணையம்

பீகார் பா.ஜ.க. தலைவரும், மக்களவை எம்.பி.யுமான சஞ்சய் ஜெய்ஸ்வால் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆம், மேலவை தேர்தலில் கூட்டணி கட்சிக்கு எத்தனை இடங்கள் கொடுக்க வேண்டும் என்பது குறித்து கட்சியின் தலைமையிடம் ஆலோசித்தோம். ஆனால் இறுதி முடிவு கட்சி மேலிடம்தான் எடுக்கும், மாநில பிரிவு அல்ல. ஆனால் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் எல்லாம் நன்றாக இருக்கிறது. பீகாரில் நடைபெறவிருக்கும் மேலவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் எந்த சர்ச்சையும் இல்லை. பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் இடையே பிளவை ஏற்படுத்த சில பிரிவினர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பணியில் வெற்றி பெற மாட்டார்கள், ஏனென்றால் பீகாரில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கூட்டணி முயற்சி செய்யப்பட்டு, கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.