ராஜஸ்தான் ரிசார்ட்டில் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்… லாக்டவுன் விதிமுறைகளை மீறியதாக புகார் கொடுத்த பா.ஜ.க.

ராஜஸ்தான் ரிசார்ட்டில் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்… லாக்டவுன் விதிமுறைகளை மீறியதாக புகார் கொடுத்த பா.ஜ.க.

இன்னும் 10 தினங்களில் குஜராத்தில் காலியாக உள்ள 4 ராஜ்யசபா உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பா.ஜ.க.வும், காங்கிரசும் தலா 2 இடங்களை கைப்பற்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் அண்மையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆக்சே படேல், ஜிது சவுத்ரி மற்றும் பிரிஜேஷ் மெர்ஜா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் பலம் 65ஆக குறைந்தது. மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

ராஜஸ்தான் ரிசார்ட்டில் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்… லாக்டவுன் விதிமுறைகளை மீறியதாக புகார் கொடுத்த பா.ஜ.க.

இதனால் பதறி போன குஜராத் காங்கிரஸ் கை வசம் உள்ள எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. ராஜ்கோட்டில் உள்ள நீல் சிட்டி ரிசார்ட், வதோதராவில் உள்ள ஏரிஸ் ரிவர்சைடு பண்ணைவீடு மற்றும் ராஜஸ்தானில் சிரோஹி ரிசார்ட் ஆகிய இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காங்கிரஸ் கட்சி தனது 65 எம்.எல்.ஏ.க்களையும் பிரித்து குழு குழுவாக தங்கவைத்தது. ராஜஸ்தானில் சிரோஹில் உள்ள ரிசார்ட்டில் தனது கட்சியை சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் தங்க வைத்துள்ளது.

ராஜஸ்தான் ரிசார்ட்டில் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்… லாக்டவுன் விதிமுறைகளை மீறியதாக புகார் கொடுத்த பா.ஜ.க.

காங்கிரசின் இந்த நடவடிக்கையை ராஜஸ்தான் பா.ஜ.க. கேள்வி கேட்டுள்ளது. மேலும் கோவிட்-19 விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டது மற்றும் லாக்டவுன் வழிகாட்டுதல்களை மீறியதால் காங்கிரஸ் கட்சி கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க.வின் நாரயணன் புரோஹித் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கோவிட்-19 தொடர்பாக எச்சரிக்கையாக இருப்பதாக மாநில அரசு சொல்கிறது ஆனால் அவர்கள் (குஜராத் காங்கிரஸ்) 22 எம்.எல்.ஏ.க்களை இங்கு அழைத்து வந்தனர். நாங்கள் புகார் அளித்தோம் மற்றும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.