பாஜக போட்டியிட முடிவு! சென்னை வருகிறார் தருண் சுக்

 
k

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து வேட்பாளரை அறிவிக்க டெல்லியில் இருந்து சென்னை வருகிறார் பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக்.

 ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.  காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் களம் இறங்கி இருக்கிறார். அதேபோல் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் போட்டியிட முன் வந்திருக்கிறார்கள். பன்னீர்செல்வம் தரப்பினரோ பாஜக முடிவுக்காக காத்திருக்கிறார்கள். 

t

 பாஜக போட்டியிடுவதாக இருந்தால் அக்கட்சிக்கு ஆதரவு என்றும்,  பாஜக போட்டியிடவில்லை என்றால் அவர்களது தரப்பினர் போட்டியில் களம் இறங்கவும் முடிவு எடுத்திருக்கிறார்கள்.

இந்நிலையில்  தருண் சுக் நாளை சென்னை வருகிறார் .  அவர் கட்சி நிர்வாகிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தி விட்டு அதன் பின்னர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதா? இல்லை  அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதா? என்பது குறித்து முடிவெடுத்து தருண் சுக் அறிவிக்க இருக்கிறார்.  முன்னதாக தமிழக பாஜக நிர்வாகிகள் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்கள்.  இதில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்கிற முடிவை கட்சி எடுக்க இருக்கிறது என்று தகவல்.

 நாளை இடைத்தேர்தல் குறித்தும் இடைத்தேர்தலில் பாஜகவின் பங்கு குறித்தும் வேட்பாளர் குறித்தும் அறிவிக்கும் தருண் சுக், அதைத் தொடர்ந்து மூன்றாம் தேதி வரைக்கும் சென்னையில் தங்கியிருந்து தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி ஆலோசனை நடத்த இருக்கிறார் என்று தகவல்.