‘படுத்து பதவி வாங்கி இருப்பே’.. வெந்த மனதில் ஈட்டி பாய்ச்சாதீர்- டெய்சி

 
daisy bjp

தமிழக பா.ஜ.க ஓ.பி.சி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா, கட்சியின் சிறுபான்மையினர் அணித் தலைவர் டெய்சி சரண் இருவருக்கும் இடையேயான சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. 

Exclusive: பாஜகவிலிருந்து விலகமாட்டேன்! அண்ணாமலை நல்ல முடிவை எடுப்பார்!  நம்பிக்கை தளராத டெய்சி சரண்! | Bjp Minority morcha Executive Dr Daisy saran  says, I will not leave BJP ...

இந்த விவகாரம் தொடர்பாக, இருவரிடமும் இந்த தொலைபேசி  உரையாடல் குறித்து அக்கட்சியின்  மாநில துணைத்தலைவரும், ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவருமான கனகசபாபதி  திருப்பூரில் விசாரணை நடத்தினார்.அப்போது  டெய்சி சரண், மற்றும்  திருச்சி சூர்யா ஆகியோர்  விசாரணைக் குழு முன்பு  ஆஜராகி விளக்கமளித்தனர். இதற்கிடையில் சூர்யா சிவாவும் டெய்சி சரணும் தங்களுக்குள் சுமூகமான முடிவு ஏற்பட்டு விட்டதாக சொல்லி செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது டெய்சி, ”சூர்யா எனக்கு தம்பி மாதிரி.  இருவரும் பரஸ்பரம் சமூகமாக பேசி பிரச்சனையை முடிவெடுத்து இருக்கிறோம். இதனை பெரிதுபடுத்த வேண்டும்.  இதுகுறித்து தலைவர் அண்ணாமலை என்னிடம் பேசினார். இனிமேல் இதுபோல் நடக்க கூடாது என என்னிடம் அண்ணாமலை உறுதி வாங்கிக்கொண்டார். முறையாக கூப்பிட்டு விசாரித்தனர். மற்ற கட்சியில் உள்ள தலைவர்களும் இதுபோன்று பேசி உள்ளனர். இது ஒன்றும் புதிது இல்ல” எனக் கூறியிருந்தார். 


இதற்கு டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி, “அப்படி சொன்னதே உங்க அன்பு தம்பி தானே மேடம்? அப்படியென்றால் இப்போது உங்கள் சொந்தக் குடும்பப் பெண்களைக் குற்றம் சாட்டுகிறீர்களா? நீங்கள் சூர்யாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தால், அவரை மன்னித்திருந்தால், தமிழகம் உங்களை மதித்திருக்கும். Overact பண்ணி நீங்களே கட்சியை பேக்கரி ஆக்கிட்டீங்க...” எனக் குறிப்பிட்டுள்ளார்.