"நான் மத்திய அமைச்சராக பதவியேற்கவில்லை..." - அண்ணாமலை பேட்டி

 
அண்ணாமலை

மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் என்ற தகவலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடியுடன் தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் புதிய அமைச்சரவை இன்று இரவு 7.15 மணிக்கு பதவியேற்க உள்ளது. புதிய அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை உள்ளிட்டோர் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எல்.முருகனுக்கு மட்டுமே மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் இன்று டெல்லியில் உள்ள மோடி இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நான் மத்திய அமைச்சராக பதவியேற்கவில்லை. தமிழ்நாட்டில் தனது மாநில தலைவர் பணிகளை தொடர இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.