எஸ்.பி.வேலுமணிக்கும், பழனிசாமிக்கும் உட்கட்சி பிரச்னை?- அண்ணாமலை

 
அண்ணாமலை

பாஜகவின் சிபிஆர் பெற்ற வாக்குகளைவிட குறைவாக பெற்றதாக வேலுமணி கூறியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நிர்பந்தத்தால் பாஜக அரசு கொண்டுவந்த சில சட்டங்களுக்கு ஆதரவு கொடுத்தோம், கூட்டணியில் இருந்து விலகியதால் அந்த நிர்பந்தம் இல்லை என்றார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இன்று அதிமுக, பாஜக ஒன்றாக இருந்திருந்தால் 35 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என எஸ்.பி.வேலுமணி இப்போது கூறியுள்ளார். அவர் சொல்வதை பார்த்தால் எஸ்.பி.வேலுமணிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் உட்கட்சி பிரச்னை இருப்பதுபோல் தெரிகிறது. தனியாக இருந்தே அதிமுக ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. அதிமுகவை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்பதுதான் தேர்தல் முடிவுகள் தரும் செய்தி.

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. சந்தர்ப்பவாத அரசியல் செய்துவரும் அதிமுக தலைவர்களை மக்கள் நிராகரித்துவிட்டனர். பாஜக பெற்ற வாக்கு எண்ணிக்கை குறித்து வேலுமணி தவறான தகவலை தந்துள்ளார்” என்றார்.