‘2038 வரை மோடி தான் பிரதமர்’ அடித்து சொல்லும் அண்ணாமலை

 
அண்ணாமலை

தமிழகத்தில் மோடி எங்கு போட்டியிட்டாலும் சாதனை வெற்றியை பெறுவார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை

மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள RR மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம் என்பது போட்டிக்கு சம்மந்தமே இல்லாத இடத்தில் கட்டியுள்ளனர். பொதுமக்களும், காளை உரிமையாளர்களும் மைதானத்திற்கு செல்ல தயாராக இல்லை. அமலாக்கத்துறையின் ஸ்பெல்லிங் கூட எங்கள் மாவட்ட செயலாளருக்கு தெரியாது, விவசாயிகள் மீதான அமலாக்கத்துறை நோட்டிஸ்சில் சாதி பெயர் குறிப்பிட்டுள்ளது என்பது காவல்துறை Firல் சாதி பெயர் இடம் பெற்றதால் தான் இடம்பெற்றுள்ளது என கூறுகிறார்கள், வனத்துறை சார்பில் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள். அரசியல்வாதிகள் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் குறித்து பேசும்போது எங்கு தவறு என குறிப்பிட வேண்டும்


2024க்கான நாடாளுமன்ற தேர்தல் மோடிக்கான தேர்தல். மோடியை விட பிரதமர் வேட்பாளருக்கான தகுதி தமிழகத்தில் யாரும் இல்லை, அப்படி இருப்பதாக கூறினால் மக்கள் சிரிப்பார்கள். இந்த தேர்தலில் யாரெல்லாம் மோடியை ஏற்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம். இந்திய கூட்டணி சுயநலக்கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி மோடியை ஆதரிக்கும் கூட்டணி, மோடியை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும் கூட்டணி வைத்துக்கொள்வோம். தற்போது தமிழகத்தில் பாஜக பலமாக உள்ளது. என்னுடைய வேலை பாஜகவை பலப்படுத்துவது தான், அந்த வேலையை வெற்றிகரமாக செய்கிறேன். மற்ற கட்சியை பலப்படுத்துவது எனது வேலை இல்லை. மதுரை எய்ம்ஸ்க்கு நில ஒப்படைப்பு தாமதமானதால் எய்ம்ஸ் வர தாமதம். தற்போது மதுரை எய்ம்ஸ் பணிக்கான டெண்டர் தொடங்கியுள்ளது. 2024 மட்டுமல்ல 2038 வரை மோடி தான் பிரதமர், அவர் தமிழகத்தில் மோடி எங்கு போட்டியிட்டாலும் சாதனை வெற்றியை பெறுவார்” என்றார்