நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை- அண்ணாமலை

 
Annamalai

அதிமுகவோடு அதிகாரப்பூர்வ கூட்டணி உள்ளதால் தான் அதிமுக தலைவரை தே.ஜ கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்தோம். தேசிய ஜனநாயக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Image

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரை கடந்த ஐந்து தினங்களாக மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று ஆறாவது நாளில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில்  பாதயாத்திரை தொடங்கினார். கோட்டை பகுதியில் இருந்து தொடங்கிய இந்த பாதயாத்திரை ஆனது திருமயம் கடைவீதி பாப்பா வயல் வழியாக திருமயம் பேருந்து நிலையம் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று நிறைவடைந்தது.

பாதயாத்திரைக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. கோடநாடு விவகாரம் பற்றி நான் என்ன கருத்து சொல்ல முடியும். காவல்துறை தான் இதில் விசாரணை நடத்த வேண்டும். ஓ.பி.எஸ் உட்பட யாரையும் நாங்கள் ஒதுக்கவில்லை. அவர்கள் எல்லோரும் வெவ்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள். பாஜக தன் பணியை செய்து வருகிறது. அதிமுகவோடு அதிகாரப்பூர்வ கூட்டணி உள்ளதால் தான் அதிமுக தலைவரை தே.ஜ கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்தோம். இந்தியாவில் ஊழல் செய்யும் அரசில் நம்பர் 1 அரசாக திமுக அரசு உள்ளது. குற்றச்சாட்டுகள் பற்றி யாரும் பேச மறுக்கிறீர்கள். அண்ணாமலை வெளியிட்ட ஆவணங்களில் என்ன பிழை உள்ளது என்று தான் விவாதிக்கிறீர்கள்" என்றார்.