அதிமுக புதிய அணியுடன் பாஜக கூட்டணியா?

 
அட்

சசிகலா-ஓபிஎஸ் - டிடிவி தினகரன் இணையும்  புதிய கூட்டணியுடன் பாஜக இணையவிருப்பதாக தகவல் பரவுகிறது.  எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறிவரும் அண்ணாமலை, அதிமுகவின் இந்த புதிய அணியை விரும்புவதாகவே தகவல்.

நான்கு அணியாக ஆகிவிட்டது அதிமுக என்று தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் உட்பட பலரும் விமர்சிக்கும் அளவிற்கு அதிமுக நான்காக பிரிந்து இருக்கிறது.  இவர்களெல்லாம் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்த அதிமுகவாக இருந்தால் திமுகவை எதிர்ப்பதற்கு சரியாக இருக்கும் என்று நினைக்கிறது பாஜக. 

 இந்த முடிவுக்கு சசிகலா, ஓபிஎஸ் , தினகரன் 3 பேரும் சம்மதம் தெரிவித்தாலும் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் பிடிவாதமாக இருக்கிறார்.  ஓபிஎஸ், டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை ஒருங்கிணைத்துவிட்டு அதிமுகவுக்கு தான் பொதுச் செயலாளராக இருக்கலாம் என்று நினைக்கும் சசிகலாவின் கனவையும் பலிக்க விடாமல் செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

ஒ

 வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் இணைவார்கள் என்ற பேச்சு இருந்த நிலையில் சட்டமன்றத்தில் வேட்டியை மடித்துக் கொண்டு அடிக்க பாயும் அளவிற்கு நாளுக்கு நாள் மோதல் வலுத்துக் கொண்டுதான் போகிறதே தவிர இணைவதற்கான வாய்ப்பு இல்லை என்ற முடிவாகிவிட்டது.   அதே நேரம் சசிகலாவுடன் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.   

இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சசிகலா ஓபிஎஸ் ,டிடிவி ,தினகரன் 3 பேரும் இணைந்து புதிய அணியை உருவாக்குவார்கள் என்றும்,  பாஜக தலைமையுடன் அந்த கூட்டணி அமையும் என்றும் தகவல் பரவுகின்றன.

ட்ட்

 டெல்லி சென்ற அண்ணாமலை கூட,   எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுடன் இனி கூட்டணி வைக்க தேவையே இல்லை என்பதை வலியுறுத்தி இருக்கிறார். அப்படி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தலைமையில் பாஜக கூட்டணி அமைத்தார். தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்றும் எச்சரித்திருக்கிறார் அண்ணாமலை.

 இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது அதிமுகவின் புதிய அணியுடன் தான் பாஜக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க போகிறது என்பது முடிவு தெளிவாகிறது . ந்சசிகலாவும் விரைவில் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் பங்களாவிற்கு எதிரே கட்டியிருக்கும் தனது பங்களாவில் குடியேற இருக்கிறார் அங்கு குடியேறியதும் அரசியல் பணிகளை விரைவு படுத்த திட்டமிட்டு வருகிறார் என்று தகவல்.