தேர்தலில் களமிறங்க வேண்டாம்! டிடிவி, ஓபிஎஸ்க்குபாஜக அறிவுரை

 
தேர்தலில் களமிறங்க வேண்டாம்! டிடிவி, ஓபிஎஸ்க்கு பாஜக அறிவுரை

வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஓபிஎஸ் உடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என டிடிவி தினகரன் கூறிவரும் நிலையில், பாஜக இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

ops

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் கடந்த 28ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்கி மேற்கொண்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்பி  உதயகுமார் பங்கேற்றார். அதேசமயம் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு எந்த ஒரு அழைப்பும் விடுக்கப்படவில்லை. இதன் காரணமாக பாஜக ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டுகிறது என்ற பரபரப்பு செய்திகள் உலா வந்தன. மாநில பாஜக மட்டுமின்றி, மத்திய பாஜகவும் ஓபிஎஸ்-ஐ ஓரங்கட்டியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் ஓபிஎஸ்க்கு பாஜக தலைமை அழைப்பு விடுக்காததே இதற்கு உதாரணம்

இதனிடையே ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் கைக்கோர்த்துள்ள நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் தரப்புக்கு பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விரைவில் நிர்வாகிகள் உடன் இருவரும் ஆலோசிப்பார்கள் என்று தெரிகிறது.