பா.ஜ.க.வில் நேர்மை இல்லை.. கட்சியிலிருந்து வெளியேறிய நடிகை சரபந்தி சட்டர்ஜி..

 
சரபந்தி சட்டர்ஜி

பா.ஜ.க.வில் நேர்மை இல்லை என்று அந்த கட்சியிலிருந்து பிரபல நடிகை சரபந்தி சட்டர்ஜி விலகினார்.

மேற்கு வங்கத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் பா.ஜ.க.வுக்கு மிகுந்த செல்வாக்கு இருப்பது போல் இருந்தது. சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று மாய பிம்பம் நிலவியது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகள், பிரபல நடிகர், நடிகைகள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

பா.ஜ.க.

ஆனால் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்தது. அந்த தேர்தலில் 210க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்து கொண்டது. மம்தா பானர்ஜி 3வது முறையாக அம்மாநில முதல்வராக பதவியேற்றார். பா.ஜ.க. 80க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனையடுத்து பா.ஜ.க.வில் இணைந்த பல தலைவர்கள் அந்த கட்சியிலிருந்து தற்போது வெளியேறி வருகின்றனர். தற்போது பிரபல பெங்காலி நடிகை சரபந்தி சட்டர்ஜி பா.ஜ.க.விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ்

நடிகை சரபந்தி சட்டர்ஜி கடந்த மார்ச் மாதத்தில்தான் பா.ஜ.க.வில் இணைந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெஹாலா மேற்கு சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக சரபந்தி சட்டர்ஜி போட்டியிட்டார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பார்த்தா சட்டர்ஜியிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில் திடீரென பா.ஜ.க.விலிருந்து விலகுவதாக சரபந்தி சட்டர்ஜி அறிவித்துள்ளார் இது தொடர்பாக சரபந்தி சட்டர்ஜி டிவிட்டரில், கடந்த மாநில தேர்தலில் நான் போட்டியிட்ட கட்சியான பா.ஜ.க.வுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தேன். மேற்கு வங்கத்துக்கான காரணத்தை முன்னெடுத்து செல்வதில் அவர்களின் (பா.ஜ.க.) முயற்சியும்,நேர்மையும் இல்லாததை காரணம் என்று பதிவு செய்துள்ளார்.