மம்தா பானர்ஜிதான் தங்களின் பிரதமர் வேட்பாளர் என திரிணாமுல் காங்கிரஸ் அறிவிக்க வேண்டும்.. சீண்டும் பா.ஜ.க.

 
மம்தா

முதல்ல மம்தா பானர்ஜிதான் தங்களின் பிரதமர் வேட்பாளர் என திரிணாமுல் காங்கிரஸ் அறிவிக்க வேண்டும் என்று மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் சுகந்தா மஜூம்தார் வலியுறுத்தியுள்ளார்.


மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் சுகந்தா மஜூம்தார் கூறியதாவது: மேற்கு வங்கத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி இருந்தால், அவர் டெல்லிக்கு வந்து பிரதமர் உள்ளிட்ட நமது அமைச்சர்களை சந்திப்பது இயல்பு. மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அமைச்சர்களை சந்திக்க ஒவ்வொரு முதலமைச்சரும் டெல்லிக்கு வருகிறார்கள். எதிர்கட்சியின் முகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மம்தா பானர்ஜிதான் தங்களின் பிரதமர் வேட்பாளர் என்று திரிணாமுல் காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்.

சுகந்தா மஜூம்தார்

முதலில் திரிணாமுல் காங்கிரஸ் இதை அறிவிக்க வேண்டும், அதன் பிறகு மம்தா பானர்ஜியை எதிர்கட்சியின் முகமாக ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை எதிர்க்கட்சிகள் முடிவு செய்யட்டும். எங்களது பிரதமர் முகம் முடிவு செய்யப்பட்டுள்ளது. அது பிரதமர் நரேந்திர மோடி. மம்தா பானர்ஜி ஒரு தேசிய கட்சியை உருவாக்க முயற்சி செய்கிறார். இதுதான் அவர் தனது கட்சி தலைவர்களை வெவ்வேறு மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான காரணம். 

திரிணாமுல் காங்கிரஸ்

மம்தா பானர்ஜி வன்முறை மீது அரசியல் செய்து மாநிலத்தில் மூன்றாவது முறையாக முதல்வரானார். இவ்வாறு அவர் தெரிவித்தார். பா.ஜ.க.வை தோற்கடிப்பதே எங்களது முன்னுரிமை செயல் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி என்று அண்மையில் தெரிவித்தார்.