முழு மெண்டல் ஆகிவிட்டார்; கீழ்ப்பாக்கத்தில் சேர்ப்பதை தவிர வேறு வழியில்லை - பாஜக பாய்ச்சல்

 
as

ஆர்எஸ் பாரதி முழு மெண்டல் ஆகிவிட்டார்.  அவரை கீழ்ப்பாக்கத்தில் சேர்ப்பதை தவிர வேறு வழியில்லை என்கிறார் அஸ்வத்தாமன்.

திருநெல்வேலியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி,   கவர்னர் ரவியும் அண்ணாமலையும் மென்டல்.  ஐபிஎஸ் படித்தவர்களில் பலர் இப்படி மென்டலாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒருவர் அண்ணாமலை.  ஐபிஎஸ் அதிகாரிகள் அனைவரையும் சொல்லவில்லை.   ஐபிஎஸ் வேலையை விட்டு விட்டு அரசியலுக்கு வருபவர்கள் மென்டலாக உள்ளார்கள் என்று கடுமையாக  விமர்சித்தார். 

rs

மேலும்,  பாஜக தமிழகத்தில் இனி ஆர்ப்பாட்டம் செய்தால் அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.  ஒரு நாள் சிறையில் இருந்தால் அதன் பிறகு கட்சியே வேண்டாம் என்று அவர்கள் ஓடி விடுவார்கள் என்று விமர்சித்தார் . 

இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெருமாள்புரம் போலீசில் பாஜக திருநெல்வேலி மண்டல தலைவர்  குரு. கண்ணன் தலைமையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பாஜக தமிழ் மாநில செயலாளரும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன்,   கவர்னரை அவதூறாக பேசி அவரை பணி செய்ய விடாமல் தடுப்பது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் கடும் குற்றமாக கருதுகிறது.  ஆகவே அந்த சட்டத்தின் கீழ் ஆர். எஸ். பாரதி மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஆர். எஸ். பாரதி மீது வழக்கு தொடரப்படும் என்கிறார்.

r

 அவர் மேலும் , பாஜகவின் அசுர வளர்ச்சியை கண்டு அச்சத்தில் திமுக தலைவர்கள் இப்படி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.  திமுக பழையபடி வன்முறையை கையில் எடுப்பதற்கு அந்தக் கட்சித் தலைவர்களின் சமீபத்திய பேச்சுகளே உதாரணமாக இருக்கின்றன.  விமர்சனம் செய்வதில் ஒரு நாகரிகம் இருக்க வேண்டும்.  ஆனால் ஆர் எஸ் பாரதி போன்றவர்கள் இனியும் நாக்கை அடக்காமல் இப்படி தாறுமாறாக பேசினால் எப்படி அடக்குவது என்பது எங்களுக்கு தெரியும் என்று எச்சரிக்கிறார்.

 தாளமுத்து நடராஜனை போன்ற தொண்டர்களை தீக்குளிக்க வைத்து உயிரைப் பறித்து அதன் மூலமாக கட்சியை வளர்த்து பணத்தை கொள்ளை அடித்து குடும்பம் வளர்க்கும் கட்சி அல்ல பாஜக என்று சொல்லும் அஸ்வத்தாமன்,   காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதற்காக தனது உயிரை நீத்த அவர் பாஜக முன்னோடியான சியாமா பிரசாத் முகர்ஜி.   நாட்டின் சொந்த அரசியல் தத்துவம் இம்மண்ணில் மலர வேண்டும் என்று அந்நிய சித்தாந்தங்களுக்கு எதிராக போராடி இந்திய மண்ணில் உயிர்த்தியாகம் செய்தவர் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா.   இப்படிப்பட்ட நெஞ்சுரம் மிக்க பாஜக தொண்டர்களை சிறையில் அடைத்தால் பயந்து ஓடி விடுவார்கள் என்று ஒரு கோழை சொல்லக்கூடாது.   இப்படி பூச்சாண்டி காட்டும் வேலையை எல்லாம் வேறு எங்காவது அவர் வைத்துக் கொள்ளட்டும்.  பாஜகவிடம் இனி அவர் பயமுறுத்தல் எடுபடாது என்ற அஸ்வத்தாமன்.   அடுத்தவரை பார்த்து மென்டல் என்று சொல்லும் ஆர்எஸ் பாரதி முழு மெண்டல் ஆகிவிட்டார்.  அவரை கீழ்ப்பாக்கத்தில் சேர்ப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறி இருக்கிறார்.