மகாராஷ்டிரா காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த பாலாசாகேப் தோரட்.. வரவேற்கும் பா.ஜ.க.

 
பாலாசாகேப் தோரட்

மகாராஷ்டிரா காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர் பாலாசாஹேப் தோரட் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மகாராஷ்டிரா காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர் பாலாசாஹேப் தோரட் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். நேற்று முன்தினம் தான்  மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகாா்ஜூன் கார்கேவுக்கு பாலாசாஹேப் தோரட் கடிதம் எழுதியிருந்தார் என தகவல். பாலாசாஹேப் தோரட் தனது பதவியை ராஜினாமா செய்தது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பெகாசஸை மத்திய அரசு பயன்படுத்தியது.. நானா படோல் பகீர் குற்றச்சாட்டு

பாலாசாஹேப் தோரட் மகாராஷ்டிரா காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அவர் பா.ஜ.க.வுக்கு செல்லலாம் என பேசப்படுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா பா.ஜ.க. தலைவர் சந்திரசேகர் பவான்குலே நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ஜ.க.வின் கதவுகள் அனைவருக்கும் திறந்தே உள்ளது. பாலாசாகேப் தோரட் அல்லது வேறு யாரேனும் விரும்பினால் பா.ஜ.க.வில் சேரலாம்.

பா.ஜ.க.

பெரிய தலைவரின் (பாலாசாகேப் தோரட்) ராஜினாமா காங்கிரஸ் கட்சிக்குள் சுயபரிசோதனைக்கு அழைப்பு விடுக்கிறது என்று  தெரிவித்தார். அதேசமயம் பாலாசாகேப் தோரட் வேறு எந்த கட்சியிலும் சேருவது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர் அண்மையில் நான் ஒரு காங்கிரஸ்காரன், எப்போதும் அப்படியே இருப்பேன் என்று தெரிவித்து இருந்தார்.